யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்புயூலை நினைவு பேரணிகள் மக்கள் உணர்வுடன் பங்கேற்பு

_DSC8748சிறீலங்கா இனவெறிஅரசின் இனஅழிப்பு நாளான யூலை 23ம் திகதியை நினைவுகூர்ந்தும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் அடிப்படைவசதிகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள 3லட்சத்திற்கும் அதிகமான தமிழ்மக்களை விடுவித்து அவர்களாது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் எனக்கோரியும், யுத்தகுற்றம் புரிந்த சிறீலங்கா அரசையும் இனப்படுகொலைபுரிந்த படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரியும் சரணடைந்த போராளிகளை சர்வதேசவிதிகளுக்கு அமைவாக நடத்தவேண்டும் எனக்கோரியும் யேர்மனியின் முக்கிய நகரங்களான டுசில்டோவ், மைன்ஸ்,சாபுறுக்கன் ஆகிய நகரங்களில் கவனயீர்ப்பு பேரணிகள் தமிழ்மக்களால் நடாத்தப்பட்டன.

டுசில்டோவ் பிரதான தொடருந்துநிலையத்திற்கு பின்புறமாக உள்ள அமெரிக்க தூதரகத்தின் முனபாக இன்றுமதியம் ஆரம்பமான ஊர்வலம் டுசில்டோவ் நாடாளுமன்ற அருகாமையைச் சென்றடைந்தது .

அங்குகூடியிருந்த மக்கள் மத்தியில் யேர்மன் இன பேராசிரியர்கள் ஆனா வொல்வ்கங் டொர்சன் மற்றும் காப்லன் றைடா ஆகியோர் யேர்மன்மொழியில் சிறீலங்கா அரசுமேற்கொண்ட இனப்படுகொலைகளை விளக்கியும் இதற்கான உரிய நடவடிக்கையை யேர்மனிய அரசு எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் சிறீலங்காவில் உள்ள தடுப்புமுகாம்களில் உள்ள மக்களை காப்பாற்ற யேர்மனியில் உள்ள தமிழ்மக்கள் ஒன்றினைத்து போராடவேண்டும் எனகோரிக்கை விடுத்தனர். சீராற்ற காலநிலையாக இருந்தபோதிலும் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மைன்ஸ்,சாபுறுக்கன் ஆகிய நகரங்களில் பேரணியாகச் சென்ற மக்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள பாராளுமன்றங்களைச் சென்றடைந்து மாநில முதல்வர்களுக்கு மகஐர்களைக் கையளித்தனர். பெர்லினில் நகரமத்தியில் சிறீலங்கா அரசின் இனஅழிப்பை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டதுடன் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டன.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.