26-07-2009: நெதர்லாந்தில் நடைபெற்ற கறுப்புயூலை நினைவுப் பிரார்த்தனை
-
இவ் விடயம் 28. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 1:58க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது. இதில் பெருந்திரளான நெதர்லாந்தவர்கள் கலந்துகொண்டனர். காலை 10.15 இற்கு நெதர்லாந்து அருட்தந்தையால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்பிரார்த்தனையில், சிங்களஅரசினால் திட்டமிட்டு இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களிற்கான ஆத்மசாந்திக்காக மன்றாட்ட பிரார்த்தனைகளும் அங்குகலந்துகொண்டமக்களால் செய்யப்பட்டன..
இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்துமொழியில் உரையும் வழங்கப்பட்டது. பிரார்தனையின் நிறைவில், தாயகத்தில் தற்போதுள்ள நிலமைபற்றியும் முட்கம்பிவேலி வதைமுகாம்கள் பற்றியும் நெதர்லாந்துமொழியில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
மேலும், 25.07.2009 சனியன்று, அம்சர்டாம் நகரில் இப்படுகொலைகளையும் தற்காலநிலமைகளையும் விளக்கி உயர்வகுப்புமாணவர்களால் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டு கறுப்புயூலை நினைவுகூரப்பட்டது.



