27-07-2009: பிரான்ஸில் நடைபெற்ற கறுப்புயூலை நினைவு நிகழ்வு
-
இவ் விடயம் 28. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:03க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் திங்கட்கிழமையன்று (27.07.2009) கறுப்பு யூலை நினைவுநாள் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசால் படுகொலைசெய்யப் பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு அருட் தந்தை ஜொரார் அவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் மலர்வணக்க நிகழ்வுகள் இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து கறுப்புயூலை நினைவு நாள் கவிதைகளும், கட்டுரைகளும், உணர்ச்சிப் பாடல்களும், பேச்சுக்களும் இடம் பெற்றன.
இந்த வேளையில் ஐரோப்பிய தமிழ்ச்சங்க செயலாளர் திரு.கிருபானந்தன் அவர்கள் உரையாற்றுகையில் சிறிலங்கா அரசின் போர்ப் படுகொலைகள் சர்வதேசத்தின் முன்நிலைநிறுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இன்று முகாம்களில் வாடும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் எமது தேசத்தின் விடுதலைக்காகவும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும் எனவும் அந்த ஒற்றுமையின்; வெளிப்பாடே உலகத்தமிழர் (Global Tamil Forum) செயற்பாடு எனவும் உரையாற்றியிருந்தார்.
நிறைவாக தமிழழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையுடனும், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எழுச்சிக் கோசத்துடனும் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.



