23-07-2007: சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுகூரல்

10சுவிட்சர்லாந்தில் கறுப்பு யூலைநினைவை முன்னிட்டு நினையு கூரல்நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மாலை 17.00மணிக்கு சுவிஸ் பாராளுமன்றச் சதுக்கத்தில் ஆரம்பமான இவ் நினைவுகூரலில் 83 யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக  வணக்கம் செலுத்தப்பட்டது.

சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடிபெற்ற இந் நிகழ்ச்சியில் பலர் நினைவுரையாற்றியிருந்தனர்

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் 83 யூலை இன அழிப்பில் படுகொலைகளை நினைவு கூர்ந்தும்  சுவிஸ் பாராளுமன்றச்சதுக்கத்தில் 23.07.2009 வியாழக்கிழமை ஒன்றுகூடல் நடைபெற்றது. பெருமளவான மக்கள் மனக்கொந்தளிப்புக்களுடனும் உணர்வுடனும் கலந்துகொண்டனர்.

தமிழர் பேரவையின் ஆலோசரரும் ஆய்வாளருமான வ.தங்கரத்தினம் அவர்கள் ஆற்றிய உரையில் கடலளவு ஈழத்தமிழனின் சோகத்தில் கறுப்பு யூலை கடுகளவுதான் எனவே தமிழர்களாகிய நாம் அழுவதை விடுத்து இனத்துக்கான காப்புப் பணியை மேற்கொள்ள உறுதி பூணுவோம் என வேண்டிக்கொண்டதுடன் ஒவ்வொரு தமிழனும் சிங்கள போர் வெறியரசை சர்வதேசத்தின் முன்னால் போர்குற்றவாளிகளாக நிறுத்துவதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார். அத்துடன் தொடர்ச்சியான போராட்டமே எமது மக்களின் நின்மதியான வாழ்வுக்கு வழிசெய்யும் என தனதுரையில் அவர் தெரிவித்திருந்தார்.

மாபெரும் தமிழினப்படுகொலையின் 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திட்டமிட்ட இனப்படுகொலையும், மிகக்கொடுமையான வதைப்புக்களும் நடைபெற்றபடியே இருக்கிறது நாளும் பெரும் மனிதப்பேரவலத்தில் சிக்கி வதைபட்டுக்கொண்டிருக்கும் எமது மக்களைக்காப்பாற்ற சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமிழ் பெண்கள் அமைப்புக்கு தமது பூரண ஆதரவு வழங்குமாறு அவ் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திருமதி வரதா கேட்டுக்கொண்டார் .மேலும் இவ் நினைவு வணக்க நிகழ்ச்சியில் திருமதி நிர்மலா யூலை நினைவு கூரல சார்ந்த்து சுவிஸ் அரசுக்கும் சர்வதேச ச்மூகத்துக்கும் அனுப்பிவைத்த மகஜரை வாசித்தார். தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் பேண் மானில செயற்பாட்டாளரான செல்வன் தினேஸ் இன்றைய தாயக மக்களின் அவல வாழ்வு மற்றும் மனித பேரவலத்தின் வடுக்கள் போன்றவற்றை புள்ளிவிபர தரவுகளுடன் டொட்மொழியூடக வெளிப்படுத்தி கருத்துரைத்தார்

நிறைவாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் மக்கள் தொடர்புப் பொறுப்பாளர் க.சிவலோகநாதன் ஆற்றிய சிறப்புரையுடன் இவ் நினைவு வணக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.