விடுதலைப்புலிகள் எத்தோற்றத்தில் வந்தாலும் முழுமையாக அழிக்கும் வல்லமை பாதுகாப்பு தரப்பிடம் உள்ளது

2114keheliya_rambukwella_Jவிடுதலைப்புலிகள் எந்த தோற்றத்தில் தம்மை கட்டியெழுப்ப முயன்றாலும் அவர்களை முழுமையாக அழிக்கும் வல்லமை இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆசிய நாடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதன் மூலம் இது உறுதிப்படுத்திப்பட்டுள்ளது என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
 
பல கடவூச்சீட்டுகள் மற்றும் பல பெயர்களை கொண்டிருந்த கே.பி கைதுசெய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும். அவர் கைதுசெய்யப்படாது சுதந்திரமாக சுற்றித் திரித்தமை மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கின்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட அதன் முக்கியஸ்தர்கள் போர் ரீதியாக முழுமையாக அழிக்கப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் என கே.பி தானே அறிவித்துக் கொண்டார். இதனை விடுதலைப்புலிகள் வேறு விதத்தில் மீண்டும் எழுச்சிப் பெற முயற்சிப்பதாக போர் வெற்றியை குறைத்து மதிப்பிட முனைந்தோர் முயற்சித்தனர்.
 
தற்போது கே.பி கைதுசெய்யப்பட்டதன் மூலம் அந்த தர்க்கமும் தகர்க்கப்பட்டுள்ளது. கே.பி. நள்ளிரவு 12.59க்கு கைதுசெய்யப்பட்டதால், புதன், கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களையும் எடுத்துக் கொள்ளலாம். தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர் கைதுசெய்யப்பட்டார். இவருடன் மேலும் எவரும் கைதுசெய்யப்பட்டார்களா எனத் தெரியவில்லை. கைதுசெய்யப்பட்ட முக்கிய நபர் கே.பி மாத்திரமே என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.