இலங்கையின் பாதுகாப்பு கண்காணிப்பு இந்திய தரப்பிடமா?

indiasrilankaசிறிலங்காவின் தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு – கிழக்கு மற்றும், நாட்டின் முக்கிய நகரங்களையும், தரை மற்றும் கடல் பகுதிகளையும் கண்காணித்து அது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக சென்னையை மையமாக கொண்ட, ‘பனராஸ்’ எனும் புலனாய்வுத்துறை நிறுவனம் ஒன்றுடன், சிறிலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

30 மில்லியன் சிறிலங்கா ரூபாய்களுக்கு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம், இப்புலனாய்வுத்துறையினரின், அதிநவீன ஒளிப்படகருவிகள் கணினி தொழில்நுட்பங்கள், வெப்ப உணர் ஒளிப்படக்கருவிகள் நகரும் பொருட்களின் இயல்புகளை அறியும் கணினிகள் ஆகியவற்றை கொண்டு, வடக்கு-கிழக்கு தமிழர்களின் நடவடிக்கைகள், தலைநகர் கொழும்பில் தமிழர்களின் நடமாட்டம், கடல் வழியான போக்குவரத்து நடவடிக்கைகள் என அனைத்தும் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விட்டதாக அரசு கூறி வரும் போதும், அவர்கள் மீள ஒன்றிணையக்கூடிய ஏது நிலை இருப்பதாக அச்சமடைந்துள்ளதாலேயே இக்கண்காணிப்பிற்கான ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இத்திட்டத்தினை பற்றி, ‘பனராஸ்’ நிறுவன அதிகாரிகள் முடிவுகள் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என சிறிலங்கா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசு இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு மற்றும் முகாமில் உள்ள மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நிதி இல்லை, என சர்வதேசத்திடம் கோரியுள்ள போதும், இவ்வாறான ஒரு கண்காணிப்பு திட்டத்த்துக்கு எவ்வாறு மிகப்பெரிய தொகையை (30 மில்லியன் ரூபா) செலவிட அனுமதித்தது என்பதும்,

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைகள் தொடர்பாக, தமிழகமே எதிர்த்து குரல் கொடுத்து வரும் வேளையில், சென்னையை மையமாக கொண்ட ஒரு புலனாய்வு அமைப்புடன், சிறிலங்கா அரசினால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது எப்படி என்பதும் கேள்விகளாக தொக்கி நிற்கின்றன?

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.