நாடுகடந்த தமிழீழ தனியரசு நிறுவுவதற்காக மானசீகமான ஆதரவை நல்கும் தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

நாடுகடந்த தமிழீழ தனியரசு நிறுவுவதற்காக மானசீகமான ஆதரவை நல்கும் அறிக்கையொன்றினை தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் முழுப்பிரதி பின்வருமாறு:

france-thamilar05.08.2009

நாடுகடந்த தமிழீழ தனியரசு நிறுவுவதற்காக மானசீகமான ஆதரவை நல்கும்
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு விடுக்கும் செய்தியானது.

1976 வரையறுக்கப்பட்டு தந்தை செல்வநாயகம் அவர்களால் தலைமையில் 1977ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் ஐனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்களித்த தீர்மானத்தின் படியும், அதன் பின்னர் களத்தில் நின்று உயிர்த்தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் போராடிய விடுதலைப்போராட்ட அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து தீர்க்கமாக திம்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், 2003ல் சர்வதேச ஆதரவுடன் நடாத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவமான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார பகிர்வின் தளமாக கொண்ட

1. தமிழர் ஒரு தேசிய இனம்,

2. இலங்கையில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகநிலம்,

3. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி சுயநிர்ணயவுரிமை

என்ற அடிப்படையான ஆணித்தரமான கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் அதற்காக உழைப்பவர்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிணை முன்னெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தனது முழுமையான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கப்போகும் ஐனநாயகரீதியிலான கட்டமைப்புக்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு பிரான்சில் வாழும் புத்திஐPவிகளும், மொழிவல்லுனர்கள், அரசியல் விஞ்ஞானிகள், விண்ணர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் குறிப்பாக எமது வாருங்கால சந்ததியினராகிய இளைஞர் யுவதிகள் தாய்குலங்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அடிமட்ட தொண்டர்களில் இருந்து அனைத்து வல்லமையும் கொண்ட தமிழ் உள்ளங்கள் அனைத்தும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையுடன் இணைந்து பணியாற்றி சிங்கள இனவாத அரசினால் தினம் தினம் எம் கண்முன்னேலேயே கொல்லப்படுகின்ற, கொடுமைப் படுத்தப்படுகின்ற, மனவுளைச்சலுக்குள்ளாக்கப்படுகின்ற, மக்கள், போராளிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், புனரமைப்பு, புனர்வாழ்வு என்ற பெயரில் எமது சிறார்கள் திசைமாற்றி தாய்தந்தையரிடம் இருந்து பிரித்தெடுக்கப்படும் அநாகரீகமான செயற்பாட்டை செயற்பட்டுக்கொண்டிருக்கின்றதை சர்வதேசத்துக்கு தொடர்ந்து அவசரமாக வெளிக்கொணர்வோம்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழ்மக்களாலும் தமிழர் அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாலும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளை சில நாடுகள் தமது அரசியல் சுயநல வர்த்தக பொருளாதார நலன் கருதி தனது உதவிகளை சில நிபந்தனைகளின் பேரில் வழங்குவதை நாமும் கண்கூடாக காண்கின்றோம். எனவே தாயகத்தின் உண்மை நிலையினை எடுத்துக்கூற அனைத்து உலகம்வாழ் தமிழ்மக்கள் நாம் எல்லோரும் செயற்பாடுகளை விரைவாக்குவோம். அடைபட்டுப்போயுள்ள எமது மக்களுக்காகவும், எங்களை நம்பி மண்ணின் மானத்துடன் வீழ்ந்து போன மாவீரர்களுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து ஒரு முடிவுகாணும் வரை எம்மை முழுமையாக ஒப்படைத்து செயற்படுவோம் என்று உறுதி கொள்வோமாக.

நன்றி

“எமதுஉரிமை, எமதுசுதந்திரம், எமதுகௌரவம் எமது உயிரிலும் உன்னதமானது”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.