14-08-2009: செஞ்சோலைப் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவுநாள் – பிரான்சு

சிறிலங்காப்பேரினவாத அரசின் மிலேச்சத்தனமான விமானக்குண்டு வீச்சுப்படுகொலையின் 3ம் ஆண்டு நினைவுநாளும், சிங்களத்தின் திட்டமிட்ட இனஅழிப்பில் சிக்கி உயிரிழந்த மக்களுக்காகவும், தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களைத்தடுக்கக்கோரியும் உலக நீதிமன்றில் நீதி கேட்போம். மாபெரும் மக்கள் ஒன்றுகூடலாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வானது இன்றைய கால கட்டத்தில் மிகமுக்கியமானது.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் பூர்வீகக்குடிகள் என்பதை உணர்ந்துள்ள உலகம் அதனை சரியகப்புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு உரிய சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும் இன்னும் தொடர்ச்சியான மனிதஉரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள் என்பதையும் தெளிவு படுத்தி தமிழ் மக்களின் அரசியல் அவாவை தெளிவுபடுத்தவும் பிரான்சில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இந்த ஒன்றுகூடலுக்கு அழைக்கப்படுகின்றார்கள்.

உலகின் பல நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தமிழர் தாயகப்பிரதேசத்துக்குள் காட்டு மிராண்டிகாளாய் புகுந்த சிங்களப்பேரினவாதம் பல்லாயிரம் தமிழ் மக்களை படுகொலைசெய்தும், மனிதகுலம் நினைத்துப்பார்க்க முடியாத கொடூரங்கள் புரிந்தும், பலகோடிபெறுமதியான சொத்தழிப்புகள் செய்தும் பெரும் இனப்படுகொலை நடாத்தி முடித்து இன்று தமிழர்களின் இரத்தக்கறைகளிலும், கண்ணீரிலும் நின்று கொட்டமடிக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கான வாழ்வு வெல்லப்படவேண்டுமானால் உலகளாவிய ரீதியல் தொடர்ச்சியான மக்கள் போராட்டம் முக்கியமானது. எனவே அனைத்து மக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இடம் – பிரான்சு மனிதவுரிமைச்சதுக்கம். (மெத்றோ- ட்றொக்கட்றோ)
காலம் – 14.08.2009 வெள்ளிக்கிழமை
நேரம் – 15.00மணி

sencholai-france

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.