வன்னி எம்.பி.செல்வம் அடைக்கலநாதனின் வவுனியா அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்

வைரவபுளியங்குளத்தில் உள்ள வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராகிய செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தின் மீது சனிக்கிழமை இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்

எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்

பொலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் அமைந்துள்ள காணியின் பின்பக்கத்தில் இருந்து வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் எவரும் காயமடையவில்லை. எனினும் அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் பின்பக்க ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.