“கே.பி கடத்தல் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது” ‐ மலேசிய பிரதமர்

42malaysia2செல்வராசா பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டாரா ? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மலேசியப் பிரதமர் இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, இதுகுறித்த விவரங்கள் என்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார்.

வழக்கம் போல கேபி கைது செய்யப்பட்ட தகவலிலும் தமிழ் மக்கள் குழப்பமடைய வேண்டும் என்ற வகையில் இலங்கை அரசு இடத்தை நாட்டை மாற்றிக் கூறி வருவதோடு புதிய தகவல்களையும் கசிய விடுவதாக கூறப்படுகிறது.

கோலாலம்பூரில் வைத்தே கேபி கடத்திக் கைது செய்யப்பட்டதாக புலிகள் கூறுகிறார்கள். அதே நேரம் இலங்கை தாய்லாந்தில் என்கிறது தாய்லாந்து பிதமரோ கேபி தாய்லாந்தில் கைது செய்யப்பட வில்லை என்கிறார். இதனால் மலேஷிய அரசு இது தொடர்பாக பல் வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் நிலையில் மலேஷியப் பிரதமரும் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.