குமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அதனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கோரிக்கை

sl flagகுமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அதனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு பத்து நாடுகளிலும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சுவிஸர்லாந்து, தென் ஆபிரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, சுவிடன், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகள் பிரதானமாக பேணப்படுவதாக கே.பி.யிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குமரன் பத்மநாதன் ஐயன்னா குருப் என்ற புலி ஆதரவு நிறுவனத்திற்கு சொந்தமான கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தவிர விடுதலைப் புலிகளின் வலையமைப்பிலுள்ள ஆறு கப்பல் நிறுவனங்கள் குறித்த தகவல்களையும் கே.பி. வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவற்றில் இரண்டு நிறுவனங்கள் சிங்கப்பூரிலும், ஏனைய நிறுவனங்கள் மலேசியா,தாய்லாந்து, பாங்கொக், ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் இயங்கிவருவகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக 10 கப்பல்கள் உள்ளன. அத்துடன், இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அறியாதிருந்த கே.பி. மேலுமொரு ஆயுதக் கப்பலை அனுப்பிவைத்ததாகவும் விசாரணைகளின் போது கே.பி. தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் குறித்து இதனுடன் தொடர்புடைய ஆசிய நாடொன்றில் விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் 160 நிறுவனங்கள் உலகம் முழுவதும் இயங்கிவருவதாக அறியக்கிடைத்துள்ளது. அத்துடன், 267 நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு வருடாந்த சந்தா செலுத்துவதாகவும் கே.பி. தகவல் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த வர்த்தகர்கள், தூதுவர்கள் மற்றும் வேறு சர்வதேச நிறுவனங்கள் குறித்த தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தகவல்களைப் பெற்றுக்கொடுத்த இரகசியத் தகவலை வழங்கிய பாதுகாப்புப் பிரிவினர் குறித்த வெளிவந்துள்ளன. இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் மலேசியாவில் கே.பியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.