அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்ய விசேட பிரிவு

airportpicஇலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்வதற்காக விசேட விசாரணைப் பிரிவொன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நபர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஜெர்மனி, சுவிஸர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை சென்றவர்கள், தமது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த இருவர் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு பிரவேசித்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு மற்றும் வவுனியா பிரதேசங்களில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிடம் பொய்யான தகவல்களை பெற்று அவற்றை சர்வதேச நாடுகளில் பிரசாரப் படுத்தும் நோக்கில், இவர்கள் இலங்கைக்குள் செல்வதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.