பத்மநாதனின் சகாப்தம் கொழும்பிலேயே முடியப்போகிறது: ரோகித போகல

Rohithaமலேசிய அரசு வழங்கிய ஒரு லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவியை கொழும்பில் உள்ள மலேசிய தூதுவர் ரொஸ்லி இஸ்மாயில், அமைச்சர் ரோகித போகல்லாகம வழியாக இலங்கை அரசிடம் அளித்தார்.

இது தொடர்பான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகாரத்துறையின் அமைச்சகத்தில் நடைபெற்றது. அங்கே அவர் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மலேசிய அரசு வழங்கிய உதவிகளுக்கு அமைச்சர் அங்கு நன்றி கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரோகித போகல்லாகம பேசினார்.

அப்போது, மலேசிய அரசின் உதவிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தும் திட்டம் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. போர் பாதித்த பின்னர் இத்தகைய சூழ்நிலையில் இருந்த வேறு எந்தவொரு நாட்டையும்விட வெற்றிகரமாகத் திட்டங்கள் முன்னேறி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும், ’’என்னைப் பொறுத்த வரையில் கொழும்பில் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் சகாப்தம் கொழும்பிலேயே முடியப் போகிறது’’என்று தெரிவித்தார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.