செஞ்சோலை படுகொலையை கண்டித்து கனேடியன்கார்ட் அமைப்பின் அஞ்சலி நிகழ்வு

620141969_gTTT6-Mசெஞ்சோலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின்  விமானத்தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவிகளை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் ஆவணி பதினான்காம் நாள் மாலை ஏழு மணியளவில் டன்டாஸ் சதுக்கத்தில் அஞ்சலி நினைவு ஆரம்பமானது.

அங்கிருந்து நேதன்பிலிப்ஸ் சதுகத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கறுப்பு துணியால் வாய்களை கட்டி அமைதியான முறையில் நடந்து சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குகொண்டிருந்தனர்.

நேதன்பிலிப்ஸ் சதுக்கத்தில் மலர் வணக்கமும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. அத்தோடு இளையோர் அமைப்பை சார்ந்த பிரதிநிதிகளும் பல்கலைகழக மாணவர் அமைப்பின் பிரதிநிகளும் கனடியன்கார்ட் அமைப்பின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

இந்நிகழ்வு இரவு 10  மணியளவில் நிறைவு பெற்றதுடன் இவ்வாறான படுகொலைகள் மீண்டும் மீண்டும் நடைபெறக்கூடாது  என்று வேண்டப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.