21-08-2009: பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல்.

எதிர்வரும் 21.08.2009 வெள்ளிக்கிழமை பி.பகல் மூன்று மணியளவில் பிரான்ஸ் பாரிஸ்நகரத்திலுள்ள மலேசியத் தூதரக வளாகத்தில், மலேசியா அரசானது சிறிலங்கா அரசிற்கு வளங்கி வருகின்ற உதவிகளை உடனடியாக நிறுத்தக்கோரி ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

இன்று வன்னித் தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து ஏதிலிகளாக திறந்த வெளிச் சிறைச்சாலைக்கள் கொட்டும் மழை வெள்ளத்தில் காலத்தைக் கழிக்கிறார்கள்;. ஆனால் சர்வதேசமோ சிங்களப் பேரினவாத அரசின் பொய்முகத்தை நம்பி தமிழ் மக்கள் மீது கருணையில்லாமல் காலம் கடத்துகின்றது.

தமிழ் மக்களுக்கான வாழ்வு வெல்லப்படவேண்டுமானால் உலகளாவிய ரீதியல் தொடர்ச்சியான மக்கள் போராட்டம் முக்கியமானது. எனவே பிரான்ஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் இந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

இடம்: Place du paraguay
75116 Paris
காலம்: 21.08.2009
நேரம்: பி.பகல் 3மணி (15.00)

Rassemblement_ABMD_1Malaisie

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.