> விடுதலைப் புலிகளுடன் போரில் 14 ஆயிரம் படையினர் கால்களை இழந்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த 25 வருடங்களாக இடம்பெற்ற போரில் 14,000 படையினர் தங்களது கால்களை இழந்துள்ளனர் என செயற்கைக் கால் பொருத்தும் நிறுவனமாக அவாஸ் இன்டர்நெஷனல் கூறியுள்ளது.

இவர்களில் ஒரு காலை இழந்தவர்களும், இரண்டு கால்களை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

எதிர்வரும் செப்ரெம்பர் 3 நாள் இவர்களுக்கு கால்கைளப் பொருத்தும் பணியை இந்த நிறுவனம் ஆரம்பிகக உள்ளது என அறிவித்துள்ளது.

படையினர் கால்களை இழந்த விடயம் தொடர்பில் சிறீலங்கா இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது அவர் எண்ணிக்கை தொடர்பில் கருத்துக் கூற மறுத்துவிட்டார் என தென்னிலங்கைச் செய்திகள் தெரிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.