தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை நடைமுறைபடுத்த அவசரப்படும் சிறீலங்கா

SriLankaவிடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழ்மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

புலிகளுக்கு எதிராகவே போர் என்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தாம் போர் நடத்த வில்லை என்றும் கூறி வந்தது அரசாங்கம். தமிழ்மக்களை சுதந்திரமாக வாழ வைக்கவே போர் நடத்தியதாகவும் கூறியது.

ஆனால் தற்போது தமிழ்மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் நகர்வுகளையிட்டு அதிருப்தி அடைந்திருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம், சட்ட ரீதியாக தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குகின்ற யற்சியில் இறங்கியிருக்கிறது.

போர் முடிந்த கையோடு உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் முயன்றது.

இது சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்று எதிர்ப்புக் கிளம்பியது.

அத்துடன் கிழக்கு மாகாணசபை இந்த திருத்தத்தை அங்கீகக்க மறுத்ததால் அது கைவிடப்படும் நிலை உருவானது.

இதன் பின்னர் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய் யும் கட்சிகளை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியது.

கடந்த ஜூலை 17ஆம் திகதியிடப்பட்டு 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் குறிப்பிட்ட இனத்தை அல்லது மதத்தை அல்லது மொழியை அடையா ளப்படுத்தும் பெயர்களைத் தாங்கிய கட்சிகளைத் தடை செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஒரு வருடத்துக்குள் இத்தகைய கட்சிகள் தமது பெயர்களை மாற்றிக் கொள்ளாவிட் டால் அவற்றின் பதிவுகளை நீக்குவதற்கு தேர் தல் ஆணையாளருக்கு இந்த திருத்தச் சட்டம் வழிசெய்கிறது.

கடந்த 6 ஆம் திகதி இந்த திருத்தச் சட்ட லம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.

இதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, லங்கா சமசமாஜக் கட்சியின் விமல் றொட்றிகோ, தமிழரசுக் கட்சியின் செய லாளர் மாவை சேனாதிராசா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுக்களை அடுத்து இந் தத் திருத்தச் சட்டலம் இப்போதைக்கு கைவிடப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

அரசாங்கம் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அடுத்தடுத்து மேற்கொண்ட யற்சிகள் தோல்வியில் டிந்திருக்கின்றன.

இந்த முயற்சிகள் சிறுபான்மை மக்களுக் கும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் அச்சுறுத்தலை விடுக்கின்ற செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.

அவசரமாக இந்த திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் யற்சிகளை மேற் கொண்டமை தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான ஒரு முயற்சியேயாகும்.

புலிகளை அழித்ததுடன் இதையும் செய்து விட்டால் பிரிவினைவாதம் தலைதூக்காது என்று நினைக்கிறது அரசாங்கம்.

இந்தத் திருத்தச் சட்டலம் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டால் தற்போது செயற் படும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிக ளுமே தமது பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். தேசிய ஐக்கிய முன்னணி தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் இதேநிலை தான்.

ஆனால், பெரும்பாலான சிங்களக் கட்சிகள் அல்லது தேசியக் கட்சிகளுக்கு இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ, மொழியையோ குறிக்கும் வகையிலான பெயர்களைக் கொண்ட கட்சி கள் தேர்தல் திணைக் களத்தில் பதிவு செய்யப்பட முடியாது போகும்.

இப்போது இருக்கும் கட்சிகளின் பதிவுகள் ரத்தாகும். தற்போது உள்ள தமிழ்க் கட்சிகள் பெரும்பாலானவை தமிழ், ஈழம் போன்ற பெயர்களைக் கொண்டதாகவே இருக்கின்றன. இந்தக் கோட்பாட்டை அழிப்பதுதான் அரசாங்கத்தின் திட்டம்.

கட்சிகளின் பெயர்களில் உள்ள ஈழம், தமிழ் போன்ற வார்த்தைகளை அழித்து விட்டால் தமிழ்த் தேசியத்தின் அடையாளங்கள் அழிந்து போய்விடும் என்று கருதுகிறது அரசாங்கம்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை என்று கூறியிருந்ததையும் மறந்து விடடியாது.

அரசாங்கம் எந்த அர்த்தத்தில் இப்படிக் கூறியது என்ற கேள்வி தமிழ்மக்களிடத்தில் இன்னம் இருக்கிறது.

சிறுபான்மையினன் அடையாளங்களை இல்லாதொழித்து விடுவது தான் அரசாங்கத்தின் திட்டமா என்ற சந்தேகம் தமிழ்,முஸ்லிம் மக்களிடத்தில் வலுவாக எழுந்திருக்கிறது.

குறிப்பாக தேர்தல் சட்டத்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் கொண்டு வரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்கள் இந்த சந்தேகங்களை இன்னும் அதிகப்படுத்துகின்றதே தவிர ஒருபோதும் குறைக்கமாட்டாது.

புலிகளுடன் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும் சிதைந்து விடும் என்று கருதியிருந்த அரசுக்கு அண்மைய தேர்தல் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

எனவே அரசாங்கம் தமிழ்த் தேசியத்தை வளரவிடாமல் சிதைக்கும் முயற்சியில் புதிய புதிய சட்டங்களை கொண்டு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

தேர்தல் திருத்தச் சட்டங்கள் என்ற பெயல் சிறுபான்மை இனத்தை, மதத்தை, மொழி பேசுவோரை பிரதிநிதித்துவம் செய்யும், அவர்களின் உமைகளுக்காக குரல்கொடுக்கும் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு பேனவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும்.

அரசாங்கம் இன, மத, மொழி தியான வேறுபாடுகளை மக்களிடத்தில் இருந்து களைவதற்கு இப்படியொரு முயற்சியில் இறங்கவில்லை.

அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கும், இனங்களுக்கும் சமத்துவமான உமைகளைக் கொடுத்து, அதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அதற்கு கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்.

ஆனால் பெரும்பான்மை மதத்தின் அடையாளத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், பெரும்பான்மையின மக்களின் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், பெரும்பான்மை மொழி பேசும் மக்களை பிரதிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறுபான்மையின மக்களின் உமைகளைப் பாதிக்கும் திருத்தங்களைச் செய்வது தான் சர்ச்சைக்குயதாகியுள்ளது.

என்னதான் அரசாங்கம் இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு காரணங்களைக் கூறினாலும் அதன் அடிப்படை நோக்கத்தை சிறுபான்மை மக்களால் இலகுவாக புந்து கொள்ளமுடிகிறது.

சிறுபான்மை மக்களின் உமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்து, சிறுபான்மை மக்களின் தேசியத்தை சிதைக்க அரசாங்கம் முனைகிறது என்பதே சிறுபான்மையினன் எண்ணமாகும்.

சிறுபான்மை மக்களுக்கு உமைகளை பகிர்ந்தளிக்கும் சட்டங்களை நடைறைப்படுத்துவதற்கு காலம் கடத்தும் அரசாங்கம், அவர்களின் உமைகளை பறிக்கின்ற திருத்தச் சட்டங்களை நடைறைப்படுத்துவதற்கு அவசரப்படுகிறது.

13ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 21 வருடங்களாகி விட்டன. ஆனாலும் அது இன்னம் நடைறைப்படுத்தப்பட வில்லை.

காரணம் அதன் மூலம் சிறுபான்மை மக்கள் அதிகாரங்களைப் பெற்று விடுவர் என்பதே.

ஆனால், அதே சிறுபான்மையின மக்களின் தேசியத்தைச் சிதைக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மட்டும் அரசாங்கம் துடியாய் துடிக்கிறது.

இங்கே தான் அரசு மீதான சந்தேகங்கள் இன்னும் அதிகக்கின்றன.

என்னதான் இப்போது இந்தத் திருத்தச் சட்டலம் கைவிடப்பட்டிருப்பினும் அடுத்த சில மாதங்களிலோ, வருடங்களிலோ இது நடைறைக்கு வரும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

நாடாளுமன்றத்தில் ஒன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைத்தால் அரசாங்கம் இதைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.