தடுப்பு முகாங்களில் 8,000 மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது நிலை – சொலமன் சிறில்

tnaவடக்கில் யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்டு ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 8,000 மாணவர்கள் பாடசாலை சென்று கல்வியைத் முடியாத நிலையில் அவதியுறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 8,000 மாணவர்கள் பாடசாலை சென்று கல்வியைத் முடியாத நிலையில் அவதியுறுகின்றனர்.

வடக்கில் இடம்பெற்ற போரையடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த 300 பாடசாலைகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்கைநெறி மிகவும் பாதிகப்பட்டுள்ளது.

ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் பல்வேறு காரணங்களால் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள 17 பாடசாலைகள் விரைவில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அங்கு மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

செட்டிக்குளத்தில் பாடசாலைகளில் ஏதிலிகள் முகாங்கள் அமையப்பெற்றதால் அங்கு மீண்டும் கல்வி நடவடிக்கையைத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த அகவை குறைந்த போராளிகளும் தங்களது கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் கற்கைநெறியை மேற்கொள்ளும் கடமைக்கு வடக்கில் இருந்து எந்தவொரு ஆசிரியரும் ஆர்வம் செலுத்த வில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.