அமெரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் யாப்பா பதிலடி

2133lakshman_yapa_abeywardena_1jஎவரது அழுத்தம் காரணமாகவும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்க ளில் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக மீளக் குடியேற்றிவிட முடியாது. அந்த மக் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண் டியது அரசின் பொறுப்பாகும். எவரது அழுத்தம் காரணமாகவும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்க ளில் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக மீளக் குடியேற்றிவிட முடியாது. அந்த மக் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண் டியது அரசின் பொறுப்பாகும்.

நிவாரணக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுதந்திர நடமாட்டத்துக்கான அனுமதியை உடன் வழங்க முடியாது.அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு மிகவும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் ஊடகத்துறை அமைச் சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன.

போரின் போது இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பாக அமெரிக்க அரசுத் தரப்பில் உயர் அதிகாரி கள் அடுத்தடுத்து வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இலங்கை அரசின் நிலைப்பட்டைக் கேட்டபோது அமைச்சர் மேற்கண்டவாறு சொன்னார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங் கப்படும் நலன்புரி விடயங்களிலேயே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுக ளின் உதவிகள் தங்கியுள்ளன என்று மத் திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக் காவின் உதவி அமைச்சர் ரொபட் ஓ. பிளேக் தெரிவித்திருந்தும் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதி வழங் கப்படவேண்டும் என்றும் சுதந்திர நட மாட்டம் விளையாட்டாக கொள்ளப்படக் கூடாது என்று சனத்தொகை மற்றும் அக திகளுக்கான அமெரிக்காவின் உதவி அமைச்சர் எரிக் ஸ்வார்ட்ஸ் தெரிவித்திருந் ததும் அறிந்தவையே. இக்கருத்துக்கள் குறித்து அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்விடயம் குறித்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:

இடம்பெயர்ந்துள்ள மக்களை விரை வாக மீள்குடியேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை அர சாங்கம் ஒருபோதும் தட்டிக்கழிக்க வில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யப்போவதுமில்லை. கடந்த நாள்க ளில் இயற்கை அனர்த்தம் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அவற்றை எதிர்கொண்டு தற்போது ஏற்ற நடவடிக்கை களை எடுத்து வருகின்றோம்.

ஆனால் யாரினதும் அழுத்தம் காரண மாக இடம்பெயர்ந்துள்ள மக்களை உட னடியாக மீளக்குடியேற்றிவிட முடியாது. காரணம் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே மீட்கப்பட்ட பிர தேசங்களில் நிலக்கண்ணிவெடிகளை முற்றாக அகற்றிய பின்ன÷ர மக்களை மீள் குடியேற்ற முடியும். அழுத்தங்கள் கார ணமாக நிலக்கண்ணிவெடிகளை அகற் றும் முன்னர் மீள்குடியேற்ற முடியாது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு அரசாங்கத்துக்÷க இருக்கின்றது. அதனை மீறமுடியாது. அரசாங்கம் அது தொடர்பில் மிகவும் உறு தியாக இருக்கின்றது.

எனினும் எங்களுக்கு சர்வதேச நாடுக ளின் உதவிகளும் தேவைப்படுகின்றன. அவற்றைப்பெற்றுக்கொண்டு நாங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை சாத்தி யமானளவு விரைவாக ÷மற்கொள்வோம். சர்வதேச உதவிகள் தேவையானவையா கும்.

சுதந்திர நடமாட்டம் குறித்து பேசப்ப டுகின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் சுதந்திர நடமாட்டம் என்ன என்பதை நாங்கள் உணர்கின்÷றாம். அது எங்க ளுக்கு புரிகின்றது. அதனை மிதிப்பதற்கு நாங்கள் தயாரில்லை. அதனை நாம் மதிக்கின்றோம் கடந்த 30 வருடகாலமாக புலிகளிடம் சிக்கியிருந்த இந்த மக்க ளுக்கு அரசாங்க÷ம தற்போது சுதந்தி ரத்தை வழங்கிவருகின்றது. இதனை யாவ ரும் உணரவேண்டும்.

தற்போதுகூட அந்த மக்களுக்கு நிவா ரணக்கிராமங்களுக்குள் நடமாட முடியும். ஆனால் புனர்வாழ்வு அளிக்கப்படுவர்கள். அவ்வாறு நடமாட அனுமதிக்கப்பட வில்லை. தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். எனவே உனடியாக நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதிப்பது சாத்தியமான தல்ல. அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமையலாம்.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக் கள் முகாம்களில் உள்ளனர் என்று கூற முடியாது. சுனாமி ஏற்பட்டபோது பாதிக் கப்பட்ட தெற்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். ஆனால் வவுனியாவில் நிவாரண கிராமங்களிலே மக்கள் உள்ளனர். இதிலும் வித்தியாசம் காணப்படுகின்றது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.