வடக்கில் உருவாக்கப்படும் இறுக்கமான இராணுவ கட்டமைப்பு – சுபத்ரா

வடக்கில் தற்போதிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபோதும் தளர்த்தப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார் பாதுகாப்பு அதிகாகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா.

அத்துடன் வடக்கில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களை நிரந்தர முகாம்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அகதி முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் புலிகளும் ஒளிந்துள்ளனர். தினம் 15 புலிகள் வரையில் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு வருவதால் காம்களுக்குள் இருக்கும் மக்களை இப்போதைக்கு விடுவிக்க முடியாதென்றும் ஜெனரல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

அதேவேளை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூயவும் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 50,000 வரையான படையினரைப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளவுள்ளதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி அடுத்த வருடம் பாதுகாப்பு செலவு குறைக்கப்பட வாய்ப்புகள் ஏதுமில்லை என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ.

இவையெல்லாம் அரசாங்கம் படைபலத்தைப் பெருக்கி வடக்கை இராணுவ மயப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது என்பதற்கு சாட்சியாக உள்ளன.

அண்மையில் கடற்படையின் புதிய பிராந்தியத் தலைமையகம் ஒன்று வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

வடமேற்குப் பிராந்தியத் தலைமையகம் என்பதே அது.

குதிரைமலைனைக்கு வடக்கே மன்னார் தெற்குப் பிரதேசத்தை உள்ளடங்கியதாக இந்த புதிய பிராந்திய தலைமையகம் (எஸ்.எல்.என்.எஸ் பரண) அமைக்கப்பட்டுள்ளது.

ள்ளிக்குளத்தை தலைமையகமாகக் கொண்டு கொமடோர் டயஸ் தலைமையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பகுதிக்கும் மன்னான் ஏனைய பகுதிகளை உள்ளடக்கிய வடமத்திய பிராந்திய தலைமையகப் பகுதிக்கும் கடந்த வாரம் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசேர சமரசிங்க விஜயம் செய்திருந்தார்.

இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அவர் பாதுகாப்பை பலப்படுத்தவதற்கான திட்டங்களையும் வகுத்திருந்தார்.

அதேவேளை விமானப்படையின் இரணைமடு மற்றும் ல்லைத்தீவு தளங்களுக்கு கடந்தவாரம் சென்ற விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக அந்த தளங்களிலுள்ள ஓடுபாதைகளை விஸ்தப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்ந்திருக்கிறார்.

ப்படைகளையும் வடக்கில் வலுவாக நிலை நிறுத்துவதற்காக படைத்தளபதிகள் அங்கு கிரமமான றையில் விஜயம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுவரை வடக்குகிழக்கில் மட்டுமே இருந்த பிராந்தியப் படைத் தலைமையகம் முதல்றையாக தென்பகுதியிலும் உருவாக்கப்படவுள்ளது.

பனாகொடவில் உள்ள 11ஆவது டிவிசன் தலைமையகம் தென்பகுதி படைத் தலைமையகமாக தரம் உயர்த்தப்படுகிறது.

இந்தப் படைத் தலைமையகத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் லலித் தவுலகல நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, போருக்குப் பின்னர் படையதிகாகளைப் பதவி உயர்த்தும் நடைறைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் மேலும் ஒரு தொகுதி அதிகாகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

63ஆவது டிவிசன் தளபதி கேணல் சரத் விஜேசிங்கவும், 62ஆவது டிவிசன் தளபதி கேணல் ஜயந்த குணரட்ணவும் பிகேடியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிகேடியர் சரத் விஜேசிங்க நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான போது திருகோணமலையில் 222 பிகேட் தளபதியாக இருந்தவர்.

மூதூர், சம்பூர், கந்தளாய் பிரதேசங்களில் புலிகளின் தாக்குதல்களை றியடிப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டவர்.

பிகேடியர் ஜயந்த குணரட்ண 593 பிகேட் தளபதியாக ல்லைத்தீவு களனையில் பணியாற்றியவர். இவர்களை விட, லெப்.கேணல் தரத்தைச் சேர்ந்த அதிகாகள் 11 பேர் ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைறைக்கு வரும் வகையில் கேணல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கெனுவோச் படைப் பிவைச் சேர்ந்த லெப்.கேணல் தீபால் தென்னக்கோன், லெப்.கேணல் பியங்க பெர்னாண்டோ, கஜபா ரெஜிமென்ட்டைச் சேர்ந்த லெப்.கேணல் சேனாரத் நிவுன்ஹெல்ல, இலகு காலாற்படையைச் சேர்ந்த லெப்.கேணல் ஜகத் கொடித்துவக்கு, லெப்.கேணல் வீரசூய, லெப்.கேணல் திலகரட்ண, விசேட படைப்பிவைச் சேர்ந்த லெப்.கேணல் ஹரேந்திர ரணசிங்க, கொமாண்டோ படைப்பிவைச் சேர்ந்த லெப்.கேணல் லலந்த கமகே, ஆட்டிலறிப் படைப்பிவைச் சேர்ந்த லெப்.கேணல் சமரசிங்க, லெப்.கேணல் வீரக்கோன், சிங்க ரெஜிமென்ட்டைச் சேர்ந்த லெப்.கேணல் ஜயசூய, ஆகியோரே கேணல்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அதேவேளை கொமாண்டோ ரெஜிமென்ட்டைச் சேர்ந்த நிலந்த ஜயவீர லெப்.கேணலாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கேணல் லலந்த கமகே கொமாண்டோ பிகேட் தளபதியாக இருக்கிறார். இறுதிக்கட்டப் போன்போது இவர் 681 பிகேட் தளபதியாக இருந்தவர்.

கேணல் ஹரேந்திர ரணசிங்க 571 பிகேட் தளபதியாக கிளிநொச்சி மற்றும் தருமபுரம் களனைகளில் பணியாற்றியவர். ன்னதாக பூநக, மன்னார் களனைகளில் 58ஆவது டிவிசனில் இருந்தவர்.

இதற்கிடையே கேணல் ரவிப்பிய தலைமையிலான 68ஆவது டிவிசனின் ன்று பிகேட்களுக்கு புதிய தளபதிகள் நியமிக்கபட்டுள்ளனர்.

8ஆவது இலகு காலாற்படைக்கு தளபதியாக இருந்த கேணல் எப்.சி.த திசாநாயக்க, 681 பிகேட் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

4ஆவது சிங்க ரெஜிமென்ட் தளபதியாக இருந்த கேணல் சுபஷான வெலிக்கல 682 பிகேட் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

11ஆவது இலகு காலாற்படைத் தளபதியாக இருந்த கேணல் சேனக விஜேசூய 684 பிகேட் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

பிகேடியர் ரவிப்பியவின் தலைமையிலான 68ஆவது டிவிசன் தற்போது அதிரடிப்படை 8 என்ற நிலையிலேயே இயங்கி வருகிறது.

ன்னர் இரண்டு பிகேட்களுடன் இயங்கிய இந்த டிவிசன் தற்போது நான்கு பிகேட்களைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

இறுதிப்போல் க்கிய பங்காற்றிய இந்த டிவிசனை மிக விரைவில் தாக்குதல் டிவிசனாகத் தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெயவருகிறது.

இதனிடையே, வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கைவிடப்பட்ட மற்றும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி யõகக் கிடைத்து வருகின்றன.

அவற்றைத் தேடிக்கண்டு பிடிப்பதற்கு இராணுவத்தின் கணிசமான வளங்கள் செலவிடப்பட்டு வருகின்றன.

ஆனாலும், இதுவரையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் புலிகளிடம் இருந்த மொத்த ஆயுதங்களில் 50 சதவீதம் மட்டுமே என்று படைத்தரப்பு கருதுகின்றது.

இதனால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

விசேட பொலிஸ் மற்றும், இராணுவப் புலனாய்வுப் பிவுகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் யற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் வன்னியின் கிழக்குப் பகுதியிலேயே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் விசுவமடு, புதுக்குடியிருப்பு, ள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தான் அதிகளவு ஆயுதங்கள் புலிகளால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இதனால் கிழக்கு வன்னியில் அங்குலம் அங்குலமாக தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

படையினன் தேடுதல்களில் சிக்காமல் தப்பிய முக்கியமான பெறுமதிமிக்க கனரக ஆயுதங்களைக் கூட புலிகளின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் லம் படையினர் மீட்டிருக்கின்றனர்.

ஜுலை மாத இறுதி வரையான காலப்பகுதியில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பற்றிய பட்டியல் ஒன்று பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கசிந்திருக்கிறது.

இந்தப் பட்டியலில் உள்ள ஆயுதங்களில் பெரும்பாலானவை சீனத் தயாப்புகள்.

சாதாரணமாக கொள்வனவு செய்ய முடியாத இந்த ஆயுதங்களைப் புலிகள் எத்தியோப்பிய மற்றும் வடகொயா போன்ற நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட இறுதிப் பாவனையாளர் சான்றிதழைப் பயன்படுத்தியே புலிகள் வாங்கியிருக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுள் அமெக்கா, ரஷ்யா, பெல்ஜியம், இஸ்ரேலியத் தயாரிப்புகளும் அடங்குகின்றன. இவற்றை விட பிரிட்டிஷ் தயாப்பு தொலைத் தொடர்பு சாதனங்களும், அதிவேக சண்டைப் படகுகளில் பொருத்தப்பட்டிருந்த ஜப்பானிய வெளிஇணைப்பு இயந்திரங்களும், ரேடர்களும் கூட படையினடம் சிக்கியுள்ளன.

இவற்றை விட பெருந்தொகையான சண்டைப் படகுகள், கரும்புலிப் படகுகள், நீர்மூழ்கிகள் என்பனவும் படையினடம் சிக்கியுள்ளதாகவும் தெய வருகிறது.

2009 ஜுலை வரையான காலத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய க்கிய ஆயுதங்களின் விபரம்.

*14.5மி.மீ நான்கு குழல் விமான எதிர்ப்பு பீரங்கிகள் 24,

152மி.மீ ஆட்டிலறிகள் 07

* 130மி.மீ ஆட்டிலறிகள் 09

* 122மி.மீ ஆட்டிலறிகள் 06

* 120மி.மீ மோட்டார்கள் 54

* 107மி.மீ பல்குழல்பீரங்கிகள் (6குழல் கள்) 03

* விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 11

* 106மி.மீ ஆர்.சி.எல் பீரங்கிகள் 08

* றொக்கட் லோஞ்சர்கள் 45

* 85மி.மீ ஆட்டிலறிகள் 02

* 82மி.மீ மோட்டார்கள் 38

* 81மி.மீ மோட்டார்கள் 130

* 60மி.மீ மோட்டார்கள் 479

* கொமாண்டோ மோட்டார்கள் 64

* உள்ளூர் தயாப்பு “பபா’ மோட்டார்கள் 45

* பி89 ரக ஆர்.பி.ஜிகள் 55

* ஆர்.பி.ஜிகள் 579

* தெர்மோபெக் ஆயுதங்கள் 42

* 40மி.மீ. கிரனேட் லோஞ்சர்கள் 210

* ஏவுகணை லோஞ்சர்கள் 14

* 23மி.மீ இரு குழல் பீரங்கிகள் 06

* 12.7மி.மீ. இயந்திரத் துப்பாக்கிகள் 91

* 0.5ஆயுதங்கள் 14

* ஜி.பி.எம்.ஜி. துப்பாக்கிகள் 44

* எம்.பி.எம்.ஜி. துப்பாக்கிகள் 247

* 56 எல்.எம்.ஜிகள் 432

* 56 துப்பாக்கிகள் 13,240

* 81 துப்பாக்கிகள் 351

* ஜி3ஏ3 துப்பாக்கிகள் 172

* ஏ.கே47 துப்பாக்கிகள் 101

* எவ்.என்.சி துப்பாக்கிகள் 60

* எம்16 துப்பாக்கிகள் 40

* 5.56மி.மீ. துப்பாக்கிகள் 17

* எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள் 74

* காஸ்கண் 15

* சைலன்ஸர் துப்பாக்கிகள் 18

* எஸ்.எம்.ஜி துப்பாக்கிகள் 72

* .22 துப்பாக்கிகள் 15

* மினி யுசி துப்பாக்கிகள் 10

* சொட்கண் 126

* 9மி.மீ .பிஸ்டல் 365

* மைக்ரோ பிஸ்டல் 83

* சினைப்பர் துப்பாக்கிகள் 27

இவற்றைவிட பெருந்தொகையான வெடிபொருட்கள், ஆயிரக்கணக்கான மோட்டார், ஆட்டிலறி ஷெல்கள், இலட்சக்கணக்கான ரவைகள், ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் படைத் தளவாடங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர் குறிப்பு: மில்லியன் கணக்கான டொலர் பெறுமதி வாய்ந்த இந்த ஆயுதங்களின் பட்டியல் முழுமையானதல்ல.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.