ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓரம் கட்டும் படலம் தொடர்கிறது – அரச ஊடகங்களில் பொன்சேகா குறித்த செய்திகளுக்கு தடை?

laughing-guy-thumb168075அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, தேசிய ரூபவாஹினி மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி ஆகிய அரச தொலைக்காட்சிகளில் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் காட்சிகள் அடங்கிய பாடல்களை ஒளிப்பரப்பபடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த சில காலமாக சரத் பொன்சேக்காவை குறிக்கும் வகையில் போர் களத்தில் கொல்லப்பட்ட சிங்களவனாக இருந்த துப்பாக்கி வேட்டு மார்பில் பாய்ந்திருக்கும் என அர்த்தம் கொண்ட பாடல் ஒளிப்பரப்பபடுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக சுயாதீனத் தொலைக்காட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தும் சுதர்மன் ரெந்தலியகொட தனக்கு நெருக்கமான ஆனந்த கல்லூரியின் ஊடக அமைப்பின் நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ள சுதர்மன் தனது தேர்தல் பிரசாரத்திற்கு ஆனந்த கல்லூரியின் நண்பர்களின் உதவியை பெற்றுக் கொள்வதற்காக நடத்திய விருந்தில் இதனை கூறியுள்ளார்.
 
ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான சரத் பொன்சேக்காவை ஊதசீனப்படுத்தி வரும் ஜனாதிபதி அவரிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் அரச இலத்திரனியல் ஊடகங்களில் மாத்திரமல்லாது லேக் ஹவுஸ் பத்திரிகைகளிலும் சரத் பொன்சேக்காவின் செயதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.