கனடாவில் நடைபெற்ற தமிழர்களின் 21ஆவது தடகளப் போட்டி

Canada Sports  (19)நேற்றைய தினம், சனிக்கிழமை, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையின் 21ஆவது வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

கனடியத் தமிழர்களின் தடகள ஆர்வத்திற்கும் உந்துசக்தியாகவும் அவர்கள் தடகளப் போட்டிகளில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் வண்ணமும் இவ் விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு வருடமும் இவ் விளையாட்டுத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஆண், பெண் என இருபிரிவினர்களுக்குமாக நடாத்தப்பட்ட இப் போட்டிகளில் பலர் ஆவலுடன் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். பலர் விளையாட்டுக் கழகங்களுடாகவும் சிலர் தனிநபர்களாகவும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

யோர்க் பல்கலைக்கழகத்தின் தடகள மைதானத்தில் காலை 9 மணிக்கு கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்த இப்போட்டிகள் இரவு 9 மணிக்கு நிறைவு பெற்றன.போட்டி நேரத்தின் போது இடையிடையே மழை பெய்தபோதிலும் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தன.

கனடியத் தமிழர் இளையோர்களை ஒன்றிணைத்து அவர்களது நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் இப்போட்டிகளிற்கு தமது ஆதரவு தெரிவித்து மைதானத்தில் தொண்டாற்றியிருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.