தொலைதூரத் தாக்குதல்களை நாடாத்தும் திறன்கொண்டவர்கள் புலிகள்

ltte-ltte-ltte-ltte-ltte-ltte-ltteநேற்றைய தினம் இடம் பெற்ற கரும்புலிகளின் வான் தாக்குதல்கள் , குறித்து இலங்கை இராணுவமும் , பாதுகாப்பு அமைச்சும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன. புத்தளம் கற்பிட்டியூடாக புலிகளின் 2 விமானங்கள் சுமார் இரவு 9.15 மணியளவில் கொழும்பு பகுதி நோக்கி விரைந்தது. இவ்விரு விமானங்களில் ஒரு விமானம் கட்டுநாயக்க விமானத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் பெருமளவான சேதங்கள் விமானப் படை தலமையகத்துக்கு ஏற்பட்டிருக்கக் கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மற்றைய விமானம் கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகம் மீது குண்டுகளை போட்ட பிற்பாடே உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிடம் மீது மோதியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இலங்கை அரசபடைகள், கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையக வழாகத்துக்குள் சென்றுவர தற்காலிக தடை விதித்துள்ளனர்.

மற்றைய விமானம் கட்டநாயக்கவில் குண்டுகளை போட்டபின்னர், தற்கொலை தாக்குதல் முயற்சியாக விமான நிலைய வழாகத்தில் வீழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது. AP மற்றும் Reuters செய்தியாளர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் இலங்கை அரசு வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சிதைவடைந்த விமானத்தை மட்டுமே கானமுடிகிறது அவற்றில் பொருத்தியிருந்த குண்டுகளை காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

எனவே வீழ்ந்து வெடித்த குண்டுகளின் சேத விபரங்களை இலங்கை அரசு மூடி மறைத்துள்ளது. சர்வதேச செய்திச் சேவைகளான AP மற்றும் Reuters இன் தகவல்படி , குறுகிய இடத்தில் விடுதலைப் புலிகள் இருந்தாலும், நெடுந்தூர தாக்குதல்களை இலங்கை அரசுக்கு எதிராக நடாத்தும் திறன்கொண்டவர்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது. புலிகளின் வரலாற்றில் முதலாவது வான் புலி இறந்து வீர காவியம் படைத்த நாள் நேற்றாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.