இலங்கை இராணுவம் ஜெனீவா பிரகடனத்தை மீறிச் செயற்பட்டுள்ளது: பிரான்ஸிஸ் போய்ல்

bush4_boyle_390x219இலங்கை இராணுவம் ஜெனீவா பிரகடனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்ஸிஸ்  போய்ல் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் யுத்த இறுதிக் கட்டத்தில் மக்கள் எதிர்நோக்கிய துயரங்கள் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1949ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை பிரகடனத்தை இலங்கை அரச படையினர் மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேர்பியா, பொஸ்னியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான இன ஒடுக்குமுறை குறித்த முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
பொஸ்னியர்கள் மீது சேர்பிய துணை இராணுவக் குழுக்கள் மேற்கொண்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் 58 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் தமிழ் சிறைக்கைதிகளை நிர்வாணப்படுத்தி இராணுவம் படுகொலை செய்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 
சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.