27-08-2009: டென்மார்க்கில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணி

P1270703டென்மார்க்கில் 27-08-2009 அன்று திசைகள் என்ற இளையோர் அமைப்பினால் எழுச்சிப்பேரணி நடாத்தப்பட்டது. இப்பேரணி முற்பகல் 10:30 மணியளவில் டென்மார்க்கின் வெளியுறவுத் திணைக்கள முன்றலில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்களின் உணர்வுபூர்வமான ஒன்றுகூடலுடன் ஆரம்பமானது. இங்கு கூடிய மக்கள் வவுனியா வதைமுகாம்களில் உள்ள தமிழ் மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு விடுதலை செய்ய வேண்டும். அதற்கு டென்மார்க் அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் போன்ற வேண்டுகோள்களை விடுத்தனர்.

பின்பு இவர்கள் அங்கிருந்து பேரணியாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றனர். அங்கும் தமிழ் மக்களைக் கொல்லாதே, வதைக்காதே, உடனடியாக அம்மக்களை விடுதலைசெய் போன்ற சொற்கொட்டுக்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இங்கு அகவணக்கம், சிறப்புரை, கவிதை போன்றவையும் இடம்பெற்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.