பொதுமக்கள் இழப்புகளை ஹோம்ஸ் எவ்வாறு உறுதிப்படுத்துவார்? மோதல் பகுதியில் எவரை சந்திப்பார்?

z_new350ஐ.நா.: ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இலங்கையில் அரசாங்கத்துடன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்; இந்த வருடம் இடம்பெற்ற பொதுமக்கள் மரணம் தொடர்பாக யாருடன் கலந்தாராய்ந்து உறுதிப்படுத்துவது என்பது தொடர்பாகவும் மோதல் பகுதிகளில் ஹோம்ஸ் யாரை சந்திப்பார் என்பது குறித்தும் அல்லது “மோதலின் மறுபக்கம்’ தொடர்பாகவும் எழுந்துள்ள கேள்விகளுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டதாக அங்குள்ள “இன்னர் சிற்றி பிரஸ்’ செய்தி ஆய்வில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

z_new350இந்தக் கேள்விகளுக்கு ஹோம்ஸ் திரும்பிவரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று ஐ.நா. பேச்சாளர் மிசேல் மொன்டாஸ் கூறியுள்ளார். ஹோம்ஸ் திரும்பி வரும்போது பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக ஐ.நா.வின் மதிப்பீட்டை அவர் (ஹோம்ஸ்) இறுதியில் வழங்குவாரா என்பதனை பேச்சாளரின் பதில் அர்த்தப்படுத்துகின்றதா என்பது தொடர்பாக தெரியவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸின் செய்தி ஆய்வில் மத்தியூ ரஸல் லீ குறிப்பிட்டுள்ளார்.

20090221164047holmesrajapakse203ஹோம்ஸின் இலங்கை விஜயத்தை மியான்மாருக்கான இப்ராகிம் கம்பாரியின் விஜயத்துடன் சிலர் ஒப்பிடுகின்றனர். கம்பாரியின் விஜயம் அரசாங்கத்தின் பின்னணியுடனானது என்றே அதிகளவில் நோக்கப்பட்டது. பலவாரங்களுக்கு முன்னரான மியான்மாருக்கான தனது விஜயம் குறித்து கம்பாரி இன்னமும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

அதிகரித்துவரும் கேள்விகளை மௌனமாக்கும் ஐ.நா.வின் முயற்சியாக து}துவரை அனுப்புவதும் அனுப்பிய பின்னரும் அமைதி பேணுவதும் காணப்படுகிறது.

இலங்கை மோதல்களில் பொதுமக்களின் இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களை ஹோம்ஸின் அலுவலகம் வைத்திருக்கின்றதா என்று அவர் இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. அத்துடன், இதனை காஸாவுடன் எவ்வாறு ஒப்பிட முடியும் என்றும் கேட்டிருந்தது.

காஸாவுக்கும் ஹோம்ஸ் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஹோம்ஸ், இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத்தை தெரிவிக்க போதிய விபரங்கள் இல்லையெனவும் இந்த மாதிரியான (காஸாவுடன்) ஒப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல எனவும் ஹோம்ஸ் தெரிவித்திருந்தார்.

20090221164201holmesrajapakse416இதேவேளை, தன்னை அடையாளம் காட்டவிரும்பாத ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை இன்னர் சிற்றி பிரஸ{டன் கதைத்தார். இலங்கை தொடர்பாக ஐ.நா. செயற்பாடின்றி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் நடவடிக்கையின்றி ஐ.நா. இருப்பதாக அவர் சாடியுள்ளார்.

இலங்கை நிலைவரத்தை சர்வதேச மயப்படுத்த அவர்கள் விரும்பவில்லை என்றும் இந்த அதிகாரி கூறியுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் புலிகளின் பங்களிப்பை அவர் குறிப்பிட்டார். அத்துடன், யுத்தநிறுத்தத்திற்கு பான் கி மூன் அழைப்பு விடுவதில் தோல்வி கண்டமை அவரின் “தன்மை’ என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டதுடன் மேலும், ” முன்னாள் இருதரப்பு இராஜதந்திரி’ (பான் கி மூன்) என்றும் ஏனையவர்களால் எதிர்க்கப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க பான் கி மூனின் மௌனமானது அவரின் சொந்த இடமான தென்கொரியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும் என்ற கருத்தை ஏனைய அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். பான் கி மூனின் அதிகாரிகள் மட்டத்திலும் கேள்விகள் அதிகரித்துவருகின்றன.

 

   மெனிக்பாம் முகாமை பார்வையிட்டார் ஹோம்ஸ் வவுனியா கச்சேரி மாநாட்டிலும் பங்கேற்பு

வன்னியில் இடம்பெறும் கடும் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு, ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் வருகை தந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடமாகாண ஆளுநர் சரத்சந்திர டிக்சன் தேல, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண மற்றும் உயர் அதிகாரிகள் ஹோம்ஸ{டன் வருகை தந்திருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்ற சிரேஷ்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்டகலந்துரையாடலிலும் பங்குகொண்ட இவர்கள் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்ந்தனர்.

ஐ.நா. பிரதிச் செயலாளரின் இந்த விஜயத்தின்போது ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கொழும்பிலிருந்து அரச ஊடகங்களைச் சேர்ந்த ஒருசிலர் மட்டுமே கூட்டி வரப்பட்டிருந்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எவரும் நேற்றைய இந்த விஜயத்தின் எந்தக் கட்டத்திலும் செய்திகள் சேகரிக்க அனுமதிக்கப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.