கனடாவில் நடைபெற்ற “வதை முகாம்களை திறந்துவிடு” ஆர்ப்பாட்டம்

Canada (3)நேற்று வெள்ளிக்கிழமை யங் மற்றும் எக்ளின்டன் சந்திப்புக்கருகில் யுனிசெப் கனடிய தலைமை பணிமனைக்கு முன்னாக இலங்கை இராணுவத்தின் அகதி முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் முன்னுாறு ஆயிரம் தமிழர்களை விடுவிக்க வேண்டியும் தமிழ் சிறுவர்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை வன்மையாக கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டது.

இந்நிகழ்வு மதியம் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர் அமைப்பை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுடன் யுனிசெப் அமைப்பை சார்ந்தவர்களுடன் உரையாடியதாகவும் மீண்டும் ஒரு தடவை சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக சிறுவர்கள் உணவு, மாற்றுடை மற்றும் கல்வி வசதியில்லாமல் அவதிப்படுவதை கண்டித்து யுனிசெப் பிரதிநிதிகளிடம் எடுத்து சொல்லப்பட்டது.

நூறு நாட்கள் கடந்தும் வதை முகம்களுக்குள் அடக்கப்பட்டு இருக்கும் மூன்று இலக்கம் ஈழத்தமிழர்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைய பாதுகாக்க வேண்டிய சர்வதேச சமூகம் அமைதி காப்பதை கண்டித்தும் பத்தாயிரம் சிறுவர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டமை பத்தாயிரம் சிறுவர்கள் அங்கவீனர் ஆக்கப்பட்டமை எண்பதாயிரம் சிறுவர்கள் மேலும் வதை முகம்களுக்குள் அடக்கப்பட்டு இருப்பதையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

மேலும் ஆயிரம் சிறுவர்கள் தமிழர் படையில் என கதறிய யுனிசெப் அமைப்பு இப்போது எண்பதாயிரம் சிறுவர்கள் பாதிக்கப்படும் போது ஏன் அமைதி காக்கிறது என்றும் கேள்வி எழுப்பபட்டதுடன் இந்த ஆர்பாட்டம் மாலை எழு மணியளவில் நிறைவு பெற்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.