பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் நடைபெற்ற திறப்புப் போராட்டம்.

Keycampaign-11வதைமுகாங்களில் தமிழ் மக்கள் அடைக்கப்பட்டு நூறாவது நாள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையுடன் பிரித்தானிய தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் திறப்புப்போராட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் ஓர் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

குறுகிய கால அறிவித்தலில் பெரும் திரளான மக்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“எமது மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வை “

“போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்து “

“இலங்கை – சட்டவிரோதமாக 300,000 மக்களை தடுத்து வைத்துள்ளது. “

“மக்களை காத்த வைத்தியர்களை காப்பாற்று “

என்ற பதாதைகளை மக்கள் தாங்கி நின்றனர்.

தாம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறிய மக்கள், திறப்பு போராட்டத்தை உலகம் பூராகவும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சனல் 4 வெளியிட்ட ஒளிப்படத்தினைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்திருந்த மக்கள் அதற்கு நீதி கேட்டும் கோஷம் எழுப்பினர்.

வியாழக்கிழமை லண்டனில் நடைபெற்ற சம்பிரதாய பூர்வ திறப்பு போராட்டத்தின் தொடக்க விழாவில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜான் ரையன் அம்மையாரால் தயாரிக்கப்பட்ட மகஜர் அங்கு கூடியிருந்த மக்களால் கையெழுத்திடப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.