தொடரும் திறப்பு போராட்டம்… திறப்பின் உலக வலம் இன்று ஆரம்பம்

Suresh2வதைமுகாங்களில் வாடும் அனைத்து தமிழ் மக்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்படுகின்ற திறப்பு போராட்டம் நேற்று லண்டன் மாநகரின் மிகவும் பிரபல்யமான இடங்களில் நடைபெற்றது.

பிற மொழி மக்களிடம் , எமது மக்களின் அவலத்தை சித்தரிக்கும் திறப்புக்களை கையளித்தபோது தமது கவலையை வெளியிட்ட அவர்கள் தமது அரச பிரதிநிதிகளிடம் இது குறித்து கேள்வி எழுப்புவதாகவும் உறுதி கூறினர்.

இத்திறப்பு போராட்டத்தின் அடுத்த கட்டமாக இத்திறப்பின் உலக வலம் இன்று ஆரம்பமாகின்றது.

கிரோசிமா , நாகசாகிக்கு நிகரான சுற்றுச் சூழல் சேதத்தையும் , மனித பேரழிவையும் உருவாக்கிய முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு நீதி கேட்டும் , முட்கம்பிவேளிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள , 280,000 க்கும் அதிகமான மக்களை விடுவிக்ககோரியும் ஐ.நா நோக்கி பயணிக்கும் தமிழகத்தைச் சார்ந்த சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் அவர்களுடனான சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு முதல் வாகனத்திலேயே, 23 வருடங்கள் , 120 நாடுகள் பயணித்து , 6 லட்சம் கிலோமீற்றர் கடந்து , 5 கண்டங்களுக்கும் பயணிக்கும், இவர்கள் தற்போது பிரித்தானியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுகின்றனர். எங்கள் உணர்வுகளை அவர்களின் பயணத்தில் பதிவு செய்யதோடு அம்மக்களை மீட்கும் பணியில் அனைவரும் இணைய அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் இத்திறப்பினை தாங்கி உலக வலம் வருவார்கள் , இறுதியில் அவர்கள் இத்திறப்பினை ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ப்பார்கள்.

அவர்களோடு சந்திப்புக்கள் பின்வரும் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஐயப்பன் ஆலயம்
36,manons avenue
harrow
HA3 5AR
30/08/09 TIME;6.00PM–10.00PM

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்
299,303 LEY STREET
ILFORD
IG1 4BN
3.00PM–10.00PM – 31/08/09

ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்.
61,65-CHURCH LANE
EDMONTON
N99PZ
6.00PM–10.00PM – 31/08/09

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.