கனடாவில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் நினைவான உதைபந்தாட்டப் போட்டி

IMG_4319தமிழீழ விடுதலைப் போரில் முதற் பலியான தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் ‘பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான’ உதைபந்தாட்டப் போட்டிகள் இரண்டாவது வருடமாக இம்முறையும், ரொறன்ரோவில், தமிழ் இளையோர் அமைப்பினாலும் கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினாலும் இணைந்து இன்று ஆகஸ்ட் 29, 2009, சனிக்கிழமை ‘சில்வர் ஸ்பிரிங்’ விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.

தமிழீழத் தேசியக்கொடி மற்றும் கனடியத் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ரொறன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இத்துடன் பெருந்தொகையான அளைவில் இளையோர்களும் இதில் கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதியில் ‘ஸ்காபரோ ரேஞ்சர்ஸ்’ விளையாட்டுக் கழகமும் ‘ரொறன்ரோ பு@ஸ்’ விளையாட்டுக் கழகமும் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகி, இறுதியில் இம்முறையும் இரண்டாவது தடவையாக ‘ஸ்காபரோ ரேஞ்சர்ஸ்| விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.