தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கள் கிழமை மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவிருக்கின்றது

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கள் கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பாக ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இச் சந்திப்பு நடைபெறவிருக்கின்றது.

இச்சந்திப்பின் போது குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம், நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள துரித மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அத்துமீறிய குடியேற்றங்கள், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து முக்கியமாக இச்சந்திப்பின் போது பேசப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறுகின்றார்.

2004 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பின்பு தமது கட்சி முதல் தடவையாக தனியாக ஜனாதிபதியை சந்தித்து பேசவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இச் சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை கூடவிருக்கின்றது.என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.