திசநாயகத்திற்கு பொது மன்னிப்பு வழங்கலாமா? ராஜபக்சே தீவிர ஆலோசனை

rajaவிடுதலைப்புலிகளூக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இலங்கையின் பிரபல  பத்திரிக்கையாளர் திசநாயகத்துக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கி சிறிலங்காவின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இது தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அதிபர் மகிந்த ராஜபக்சேவிடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
லிபியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு அந்த நாட்டுக்குச் சென்றிருக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவும் வெளிநாடுகளில் இருந்து உருவாகியிருக்கும் இந்த அழுத்தங்கள் தொடர்பாக விரிவான முறையில் ஆராய்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என வெளிநாடுகள் பலவும் முன்வைத்திருக்கும் யோசனைகள் தொடர்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் இருவரும் ஆராய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திசநாயகத்துக்குப் பொது மன்னிப்பு வழங்கினால் அதன் மூலம் அடுத்த அதிபர் பதவிக்கான தேர்தலில் தமிழர்களின் ஆதரவை மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அமைச்சர் ரோகித போகல்லாகம சுட்டிக்காட்டியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.