சு.ப.தமிழ்ச்செல்வனின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய பெண் கைது என்கிறது காவற்துறை

questionskvoor090500048விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியதாக கூறப்படும் பெண்ணொருவரை தாம் வெள்ளவத்தையில் உள்ள தங்குமிட விடுதியொன்றில் வைத்து கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதான இந்த பெண், வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் வெளிநாடு செல்லும் நோக்கில் வெள்ளவத்தையில் தங்கியிருந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். இந்த பெண்ணின் கணவரும் விடுதலைப்புலிகளின் மோட்டார் பிரிவின் உறுப்பினராக செயற்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோதலில் படையினரின் தாக்குதல் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
 
விடுதலைப்புலிகள் தமிழில் வெளியிடும் பத்திரிகைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து அதனை சர்வதேச ரீதியில் பிரசாரப்படுத்தும் பணிகளிலும் இவர் சம்பந்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்ணை கொழும்புக்கு அழைத்துச் செல்ல உதவியவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த பெண் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு
உட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.