“இளைய துரோகி” விஜயை எதிர்த்து தமிழ் நாட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

nerudal-vijay1fதமிழ் நாட்டில் பிரபல நடிகரான விஜயை எதிர்த்துப் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் நடகர் விஜய் காங்கிரஸ் இளைஞரனித் தலைவரும் சோனியாவின் புதல்வருமான ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியுடன் இணைவதுகுறித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார்.

இதனால் தமிழின உணர்வார்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள இளையதளபதி, இது குறித்து இன்னமும் விளக்கம் அளிக்காமல் தட்டிக்கழித்து வரும் நிலையில் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் எதிர்பலைகள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

nerudal-vijayf

nerudal-vijay1f

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க உதவிய இந்திய மத்தியரசான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேரவுள்ள விஜையின் படங்களை புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்க நேரிடும் என சமீபத்தில் கனடாவிலுள்ள படைப்பாளிகள் கழகமும் அறிவித்திருந்தது. இன் நிலையில் இவர் தொடர்ந்தும் மெளனமாக இருப்பது மேலும் பல சந்தோகங்களைக் கிளப்புவதாக அமைகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.