நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பா. வளர்மதி
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு கொம்பனிவீதி சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு ஆதரவு கோரி படையினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவால் ஒரு போதும் தீர்வுகாண முடியாது. அரசின் இழுத்தடிப்பு பொறிக்குள் தமிழர்கள் சிக்கிவிடக் கூடாது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.