செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 2,192 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

30. 07. 2015: பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்  வாதம் நடைபெற்று வருகிறது.

30. 07. 2015: முல்லா உமர் உயிரிழந்ததை உறுதி செய்தது தலீபான்

தலீபான்களின் புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தி வந்தவர் தலீபான் தலைவர், ‘ஒற்றைக்கண்’ முல்லா உமர்.

30. 07. 2015: மஹிந்த பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

29. 07. 2015: சு.க மத்தியகுழுவை ஓகஸ்ட் 7 வரை கூட்ட முடியாது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்தியக்குழுவை கூட்டுவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்க, மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

29. 07. 2015: ராஜீவ் வழக்கு: இந்திய மத்திய அரசின் மீள்பரிசீலனை மனு தள்ளுபடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனுவை இந்திய உச்சநீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்துள்ளது.

29. 07. 2015: முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் தொடர்கிறது: பா.அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தமது மக்களின் விடுதலைக்காக போராடி இன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் இன்றும் தொடர்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

27. 07. 2015: இந்தியா, அமெரிக்காவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அமெரிக்காவும் இந்தியாவும், இன்னும் தெளிவானதும், காத்திரமானதுமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில்,

27. 07. 2015: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானர்மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத்  தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

26. 07. 2015: தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியல் யாப்பு – பிரதமர்

தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

26. 07. 2015: ‘உக்குவா’ சுட்டுக்கொலை

மனித படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 'உக்குவா' என்றழைக்கப்படும் நபர் ஒருவர், இனந்தெரியாதோரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் பலியாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பக்கம் 1, மொத்தம் 2,192 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2015 நெருடல். All rights reserved.