இந்தியச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 207 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

19. 05. 2013: சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!

தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

18. 05. 2013: இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  

17. 05. 2013: சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை தமிழ்நாட்டின் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது.

16. 05. 2013: தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12. 05. 2013: ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்!- கருணாநிதி

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12. 05. 2013: தமிழக அரசே! மே-18ம் திகதியை தமிழின அழிப்பு நாளாக அறிவித்திடுக: தமிழர் பண்பாட்டு நடுவம்

2009ம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவின் ஒப்புதலோடு உலக நாடுகள் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது.

12. 05. 2013: பெற்ற மகனை விற்ற அன்னை: விலை பேசிய பணத்தை தராததால் போலீசில் பொய் புகார்

இன்று மே 12. இந்த நாள் உலகெங்கிலும் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக சென்னையை சேர்ந்த ஒரு பெண் போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்.

06. 05. 2013: தென்னிந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 66 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்று கொண்டிருந்த 66 பேரை இலங்கையின் ஹிக்கடுவை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

04. 05. 2013: பேரறிவாளன், முருகன் சாந்தன் தண்டனையைக் குறைக்குமாறு பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்படி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

02. 05. 2013: மாவீரர் மேஜர் கணேஷின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது

பயத்தின் காரணமாக தமிழ் நாட்டின் திருச்சியில் கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் (கோவர்ஜன் 10, நிதுர்சன் 7)  தங்கியிருந்த ஜெயந்தினி 33  இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார்
பக்கம் 1, மொத்தம் 207 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.