இந்தியச் செய்திகள்

பக்கம் 10, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »

24. 08. 2015: சிங்கள கட்சியினர் ஒருபோதும் தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள்: பழ.நெடுமாறன்

சிங்கள கட்சியினர் ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள். என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.நெல்லையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசும் போது மேலும் அவர் கூறியதாவது: இலங்கையில் தமிழர்களை யார் அதிகமாக ஒடுக்குவது என்பதில் தான் சிங்கள கட்சிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது.

21. 08. 2015: ஈழத் தமிழர்களை சித்ரவதை செய்யும் சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடுக! மாபெரும் முற்றுகை போராட்டம்!

ஈழத் தமிழர்களை சித்ரவதை செய்யும் சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடுக! மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூலை 24-ந் தேதி திருச்சி ஈழத் தமிழர் சிறப்பு முகாமை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம்!

20. 08. 2015: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் இரட்டை பலன் பெற முடியாது என்று கூறியுள்ளது.

13. 08. 2015: ராஜீவ் கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்ததையடுத்து,இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

30. 07. 2015: பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்  வாதம் நடைபெற்று வருகிறது.

29. 07. 2015: ராஜீவ் வழக்கு: இந்திய மத்திய அரசின் மீள்பரிசீலனை மனு தள்ளுபடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனுவை இந்திய உச்சநீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்துள்ளது.

27. 07. 2015: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானர்மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத்  தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

09. 07. 2015: புலிகள் விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் – வை.கோ

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.

12. 06. 2015: இந்தியாவின் கமாண்டோ தாக்குதல் – பர்மா மறுப்பு

இந்தியப் படைகள் எல்லை தாண்டி தமது நாட்டில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கியதான செய்திகள் தவறு என்று பர்மா மறுத்துள்ளது.

08. 06. 2015: பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பேரறிவாளனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று நோய் சிகிச்சைக்காக இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படார்.
பக்கம் 10, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.