இந்தியச் செய்திகள்

பக்கம் 296, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...292293294295296

23. 08. 2011: ஆந்திர அரசை கவிழ்க்கப் போவதாக ஜெகன் மோகன் ரெட்டி மிரட்டல்

ஜெகன் மோகன் ரெட்டி மீதான சி.பி.ஐ.ன் முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பெயரை சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்து எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் பதவி விலக போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

22. 08. 2011: ‘ சிறந்த பொருளதார நிபுணர் ஆட்சியிலே சாதாரண மனிதன் அதிர்ச்சி ‘ – அத்வானி

பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தாலும் இவரது ஆட்சியில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் சாதாரண மனிதர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர். இத்துடன் இந்த அரசு, ஊழல் மலிந்த அரசாக மாறிப்போனது எனவே பிரதமர் ஆளும் தகுதியை இழந்து விட்டார். இவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என அத்வானி ஆவேசமாக பேசினார்.

22. 08. 2011: சரவணா‌ ‌ஸ்டோ‌ர்‌ஸ், கண‌க்‌கி‌ல் வராத ரூ.150 கோடி பது‌க்க‌ல்

செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌பிரபலமான சரவணா ‌ஸ்டோ‌ர்‌ஸ், செ‌ல்வ‌ர‌த்‌தின‌ம் குழும‌த்த‌ி‌ற்கு சொ‌ந்தமான ‌‌நிறுவன‌ங்க‌‌ளி‌ல் கண‌க்‌கி‌ல் கா‌ட்ட‌ப்படாத ரூ.150 கோடியை வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிகள‌் க‌ண்டு‌‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

21. 08. 2011: இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன்!- சிபிஐ அதிகாரி மோகன்ராஜ்

இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச்சீட்டு குமரன் பத்மநாதன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வு துறை  மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

21. 08. 2011: அன்னா ஹசாரேயால் மத்திய அரசு திணறல்

ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால், எந்த முடிவும் எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. ஊழல் எதிர்ப்புக்கு, மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

21. 08. 2011: தமிழக மீனவர்களை தாக்கியது டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்கள்: சீமான்

நடுக்கடலில் 30 படகுகளில் வந்து  தமிழக மீனவர்களை தாக்கியது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்கள்  சீமான் குற்றம் சாட்டியுள்ளார்
பக்கம் 296, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...292293294295296
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.