இந்தியச் செய்திகள்

பக்கம் 30, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

01. 04. 2014: அமெரிக்க பிரேரணை தொடர்பில் நடுநிலைமை வகித்தமை அமைச்சரவை தீர்மானம் இல்லை!– சிதம்பரம்

அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலைமை வகித்தமைக்காக இந்திய தரப்பில் முன்வைக்கப்படுகின்ற காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

31. 03. 2014: பச்சிளம் குழந்தையின் நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம்! மருத்துவர்கள் அதிர்ச்சி

பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30. 03. 2014: இந்திய மீனவர்களுக்கு இனிப்பு வழங்கிய இலங்கை கடற்படையினர்!

இந்திய மீனவர்களுக்கு கச்சதீவுக்கு அருகில் மீன்பிடிக்க அனுமதித்த இலங்கை கடற்படையினர், இந்தியா மீனவர்களுக்கு குளிர்பானங்களையும் இனிப்புகளை வழங்கியுள்ளனர்.

30. 03. 2014: தமிழர்களுக்கு மீண்டும் துரோகமிழைத்து விட்டது இந்தியா- சீக்கிய அமைப்பு கண்டனம்

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான,சுதந்திரமான அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானத்துக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா ஆதரவளிக்காதது குறித்து சீக்கியர்களின் அமைப்பான அனைத்துலக தல் கால்சா (Dal Khalsa) கண்டனம் தெரிவித்துள்ளது. 

29. 03. 2014: ஐ.நாவில் இந்திய அதிகாரிகள் பேசிய விதம் தொடர்பில் பெரும் ஏமாற்றம் -அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியாவின் முடிவு ஏமாற்றத்தை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

29. 03. 2014: திருச்சி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இலங்கை தடை?

தமிழ்நாடு, திருச்சி மாவட்டத்தின் விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

29. 03. 2014: புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா ஜெயராம்

இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

28. 03. 2014: சகல இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

28. 03. 2014: இந்தியாவில் நடைபெறவிருக்கும் எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உரியவர்களுக்கு பாடம் புகட்டுவர் -அரியநேத்திரன்

அமெரிக்காவினால் ஜெனிவாவிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காமை ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசியதற்கு ஒப்பானது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

27. 03. 2014: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு! 24 பேர் சிறைபிடிப்பு

தமிழநாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். 
பக்கம் 30, மொத்தம் 296 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.