யாழ்ப்பாண கலாசாரத்திற்கு முராணான வகையில் யாழ்.நகரில் திறக்கப்படவிருந்த உடல் மசாஜ் நிலையத்தை திறக்க கூடாதென யாழ்.மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் தீர்வுத்திட்ட ஒப்பந்தங்களில் தமிழ் கூட்டமைப்புடன் கைச்சாத்திடமாட்டார். ஏனென்றால், பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே பிரதான காரணமாகும்.என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் சீனாவுடனான நட்புறவிலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான ராஜதந்திர காய் நகர்த்தல்களை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சரத்பொன்சேகாவை விடுவிக்கும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட மே 18 ஆம் திகதியை உலகத் தமிழர்கள் துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். எனினும், இலங்கை அரசாங்கம் மே 19 ஆம் திகதியன்று இந்த தடவை விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட மூன்றாவது வருட கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது.
இலங்கையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் தமது பிரதிநிதிகளை நியமித்ததின் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமெனில், அரசாங்கத்திலே பதவி வகிக்கும் அதே இயக்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து, கிளிவெட்டி இடைத்தங்கல் நலன்புரி முகாமில் வசிக்கும் தமிழ் மக்களை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் அண்மையில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
திருகோணமலையில் விநாயகர் கோவிலை அகற்ற சிறிலங்கா அரசு உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா தூதரகம் அருகே நேற்று மாலை முற்றுகை போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வா களனிப் பிரதேசத்துக்கு கிடைத்த ஒரு வரம். களனியில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட புகழுக்கு மேர்வினின் சேவைகளே காரணமாக அமைந்தன என்று களனி ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி கொள்ளுபட்டியே மஹிந்த சங்கராகித்த தேரர் கூறியுள்ளார்.