தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 2, மொத்தம் 1,099 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

16. 05. 2012: சவுதியிலும் ஓமானிலும் இருந்து எண்ணெய் இறக்குமதி: சுசில் பிரேம்ஜயந்த

அமெரிக்காவினால் ஈரானுக்கு விதிக்கப்படும் தடையால் மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்படும் போது, அதற்கு பதிலாக ஓமான் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கபப்பட்டுள்ளன.

16. 05. 2012: பீரிசின் அமெரிக்கப் பயணத்திட்டத்தை வெளியிட அரசாங்கம் மறுப்பு

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் அமெரிக்கப் பயண நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்களை அரசாங்கம் இரகசியமாகவே வைத்துள்ளது. 

16. 05. 2012: இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்: கோத்தபாய

இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

16. 05. 2012: ஜனாதிபதியுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார் என்று ஐ. தே.க. வின் பொதுச் செயலாளரும் எம். பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

16. 05. 2012: நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: கூட்டமைப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

16. 05. 2012: சரத் பொன்சேகா இந்த வாரத்தில் விடுதலை செய்யப்படுவார்!

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா "இந்த வாரத்தில்' விடுதலை செய்யப்படுவார் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

16. 05. 2012: புலிகள் இயக்கத்திலிருந்து விலகியொரின் தகவல் மட்டுமே இராணுவத்தால் சேகரிக்கப்படுகிறது-கருணா

மட்டக்களப்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைதுசெய்யும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிவித்த கருணா , விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியோர் தொடர்பில் விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

15. 05. 2012: கடற்படையினரின் உதவியுடன் தென்பகுதி மீனவர் வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதேச மீனவர்கள்,இதற்கு கடற்படையினர் உடந்தையாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

15. 05. 2012: ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு

கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.

15. 05. 2012: புதையல் தோண்டிய செயற்பாடு இந்து மதத்தவரை வேதனைப்படுத்தியுள்ளது! யோகேஸ்வரன் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்

இந்து சமயத்தின் தொன்மையை அழித்து பௌத்த ஆதிக்கத்தை ஏற்படுத்துவதாக பொலநறுவை சிவன் ஆலய புதையல் தோண்டல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என மட்டு.எம்.பி. சீ.யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பக்கம் 2, மொத்தம் 1,099 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.