தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 20, மொத்தம் 1,099 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

27. 04. 2012: தமிழர்கள் மீது வீசப்பட்ட சிறிலங்காவின் கொத்தணிக்குண்டுகள் ! உறுதிப்படுத்திய ஐ.நா நிலக்கண்ணி நிபுணர்!

தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்காப் படைகளினது ஆக்கிரமிப்பு படை நடவடிக்கையின் போது கொத்தணிக்குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

27. 04. 2012: முஸ்லிம் தலைவர்களுடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன், பிரதமர் டி.எம். ஜயரட்ன இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

27. 04. 2012: மன்னார், வவுனியாவில் முறைகேடான முறையில் நியமனங்கள்!- செல்வம் எம்.பி.

மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத்தேர்வு  இடம்பெறாமல் முறைக்கேடாக நியமனம் வழங்கப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

27. 04. 2012: சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு – சுஸ்மா சுவராஜ் அதிர்ச்சி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு 13வது அரசிலயமைப்புத் திருத்தம் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது குறித்து, இந்தியக் குழுவுக்குத் தலைமையேற்றிருந்த, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 

27. 04. 2012: வடமராட்சி, பருத்தித்துறையில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வடமராட்சி பருத்தித்துறை 3 ஆம் குறுக்குத் தெரு, சின்னத் தோட்டம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

27. 04. 2012: ஹிலாரியுடன் பேச்சு நடத்த பீரிஸ் குழுவினர் அடுத்த மாதம் 14 ஆம் திகதி அமெரிக்கா பயணம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அடுத்த மாதம் 14 ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவுக்கு செல்லும் அமைச்ர் பீரிஸ் அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுடன் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

26. 04. 2012: முள்ளிவாய்க்காலில் போரை நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டவர் மஹிந்தவே!- இராணுவத் தளபதி

வன்னியில் நடந்த போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்துமாறு சர்வதேசம் கடும் அழுத்தங்களை வழங்கி வந்தபோதும் போரைத் தொடர்ந்து நடத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே நேரடியாக உத்தரவிட்டார் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

26. 04. 2012: அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்தது சிறிலங்கா

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, ஈரானுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முறித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

26. 04. 2012: இன்றுடன் முடிகிறது சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 

26. 04. 2012: விமானப்படைத் தளபதியின் ஹோட்டலை அரசு பறிமுதல் செய்யும்: அனுர பிரியதர்சன யாப்பா

முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஸான் குணதிலக்கவின் ஹோட்டலை அரசு பறிமுதல் செய்யும் என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
பக்கம் 20, மொத்தம் 1,099 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.