சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமென்றில் கருக்கலைப்பு செய்த குடும்பப் பெண்ணொருவர் அதிகமான இரத்தப்போக்கு காரணமாக மரணமாகியுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு மரணமானவராவார்.
வன்னியில் உயிர்நீத்த மக்ளுக்கான அஞ்சலி நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது ஆண்டாகவும் வவுனியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: சிறிலங்காவில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' ((‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka) என்ற நூல் தொடர்பாக, இது வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
போக்குவரத்து நோக்கத்திற்காக 14 ஹெலிகொப்டர்கள் ரஸ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் நோர்வே நாடாளுமன்றில் இன்று உரையாற்ற உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் 1980களின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் திட்டமிடுதல் மற்றும் நிறைவேற்றுதலில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வலுவாகப் பங்களித்திருந்ததாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்யப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி தருமாறு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பொதுச்சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுடன் சேர்க்கப்பட உள்ளதாக கூறி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30ம்திகதி அலரி மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று இளைஞர்கள் இதுவரையில் தமது பெற்றோர்களுடன் சேர்க்கப்படவும், வீடு வந்து சேரவும் இல்லை.