சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன அதிபர் முகமட் அப்பாஸ், நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கு பதிலடியாகவே, கூடங்குளம் அணுஉலைக்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்று வரும் இந்திய மாநில முதலமைச்சர்களின் உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பங்கெடுத்து வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து மேலும் இரண்டு கட்சிகள் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில்தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கமில்லாமல், நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட விடுமுறையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
13ம் அரசியலமைப்பு திருத்தம்,இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெற்றெடுத்த குழந்தை. இந்திய அரசாங்கத்தின் சொந்த தயாரிப்பு. இதன்மூலம் மாகாணசபைகள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் ஐ.நாவின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான பொறியியலாளரின் வீட்டின் மீது நேற்றிரவு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்து 3 ஆண்டுகளாகியும் இன்னும் புலிகள் வசித்து வருவதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கெதிராக பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்