தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் தீர்மானித்துள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் நெருக்கடியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காகவே, ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றிய தாமர குணநாயகம் பதவி விலக்கப்பட்டதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி, தற்கொலை மூலம் ‘இலங்கை தமது இராஜதந்திரத்தை மாய்த்துக்கொண்ட நாள்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரச காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை.
இரு குழந்தைகள் மற்றும் பெண் ஒருவரை கொட்டாஞ்சேனை தங்குமிடம் ஒன்றில் தடுத்துவைத்து அவர்களிடம் 40 லட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த குழுவின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முதலில் அரசாங்கம் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கோரியுள்ளது.
ஹிலாரி கிளின்டனை சந்திக்க செல்லும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸின் தலைமையிலான குழு, வீசும் கை வெறும் கையுடனேயே செல்வதாக இன்றைய செய்திதாள்கள் தெரிவித்துள்ளன.