தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 993, மொத்தம் 1,099 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...991992993994995...1,0001,0101,020...இறுதிப்பக்கம் »

27. 05. 2009: தற்போது இலங்கைக் கடற்படையும், இராணுவமும் முரண்பட்டுக்கொள்கின்றன

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை கடத்திய விவகாரம் தொடர்பில் கடற்படை பேச்சாளருக்கும், இராணுவப் படைத் தளபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.   தேசிய தொலைக்காட்சியில் யுத்த வெற்றி தொடர்பில் செவ்விகளை அளித்த இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

27. 05. 2009: நாங்கள் எது கேட்டாலும் தமிழர்கள் பதிற் கேள்வி தொடுக்காது பதிலளிக்க வேண்டும் – கொழும்பில் இது இன்றய நிலமை

இனரீதியில் அச்சுறுத்தப்பட்ட முதியவர் தெற்கில் போர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தமிழர்கள் மீதான இம்சைகள் எவ்விதத்திலும் குறைவடைவதாகத் தெரியவில்லை. இளைஞர், யுவதிகள் மட்டுமல்லாது படித்து நல்ல பதவிகளில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களையும் இம்சைப்படுத்தும் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றுக்கொண்டேயிருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

27. 05. 2009: பிணந்தின்னிப் பேய்கள் போன்று செயற்படும் தமிழக காவற்துறையினர் – ஈழ அகதிகள் வேதனை

ஈழத்தில் இருந்து கப்பல்மூலமாகம், விமானம் மூலமாகவும் சென்று தமிழகத்தில் முகாம்களிலும், வெளியிலும் தங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழக காவற்துறையினர் பல்வேறு வகையில் பெரும் அசௌகரியத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்குவதாக பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

27. 05. 2009: இலங்கை போர் குற்றங்கள்: விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை

இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபையில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவிநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

27. 05. 2009: தமிழர்களின் கண்கள் – சிறுநீரகங்களை விற்கின்றனர் – தா.பா

ஈழத் தமிழர்கள் குறி்த்து உண்மையான நிலவரத்தை கண்டறிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

27. 05. 2009: எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரை காணவில்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரும் உறவினருமான தவராஜசிங்கம் சுபாஸ்(23வயது)என்பவரே காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27. 05. 2009: புலிகளுடன் தொடர்பை பேணிய ஊடகவியலாளர்கள் மீதும் சட்டநடவடிக்கை!

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஒப்பந்த அடிப்படையில் நிதியுதவி பெற்று, செயற்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு உதவியுள்ள இவ் ஊடகவியலாளர்கள் தேச துரோகிகள். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் இவர்களை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

27. 05. 2009: ஐ.நா மனித உரிமை பேரவையின் நேற்றைய விவாதத்தில் ஐ.நா.வில் பிளவு: பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி சிறிலங்கா மீதான விசாரணைக்கு ஆதரவு

நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை), ஜெனீவாவில், மனித உரிமை பேரவையின், சிறிலங்கா தொடர்பான விசேட அமர்வு ஆரம்பமாகியது. இதன் போது, மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள், இரு அணிகளாக பிளவு பட்டு, சிறிலங்காவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

27. 05. 2009: விடுதலைப் புலிகள் சரணடைய முடியாது – மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன்

காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

27. 05. 2009: அரசியல் தீர்வு யார் கையில்?

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் என்று சிறிலங்க அரசும் அதன் தலைவர் ராஜபக்சவும் கூறியதை ‘உள்நாட்டுப் போரின்’ முடிவாக தங்கள் வசதிக்கு ஏற்றுக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட சில உலக நாடுகள், உடனடியாக தமிழர்கள் பிரச்சனைக்கு ஒரு நீடித்த அரசியல் தீர்வை சிறிலங்க அரசு உருவாக்க வேண்டும் என்று ஏதோ தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள சிறிலங்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
பக்கம் 993, மொத்தம் 1,099 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...991992993994995...1,0001,0101,020...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.