புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 237 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

10. 08. 2016: கனடாவில் ஒக்டோபர் மாதம் இலங்கை தமிழருக்கான தண்டனை அறிவிப்பு!

கனடாவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கடந்த வாரம் தண்டனை வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் தண்டணைஅறிவிக்கப்படும் என்று கனேடிய செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

06. 08. 2016: அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் தமிழீழம் தனியாக இணைப்பு!

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் பிறந்த நாடு என்பதற்கு தமிழீழம் எனவும் தனியாக குறிக்கப்படமுடியும் .

06. 08. 2016: 75 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22. 07. 2016: மலேசிய சிறையில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்த ஆலோசனை

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில்ஆராய்வதாக மலேசியாவின் உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.

15. 07. 2016: ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழர்

ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார்.

13. 07. 2016: அவுஸ்திரேலியாவில் கிரிகெட்டில் கலக்கும் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

01. 07. 2016: கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்!

கனடவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர்.

01. 07. 2016: அவுஸ்திரேலிய தேர்தலும் இலங்கைத் தமிழ் அகதிகளின் தஞ்சக்கோரிக்கைகளும்…

அவுஸ்திரேலியாவில் நாளை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பது லிபரல் கட்சியா? லேபர் கட்சியா? என்ற விவாதத்தோடு புகலிடகோரிக்கையாளர்களின் பிரச்சினையும் பெரிதளவில் பேசப்படுகிறது.

25. 06. 2016: வானொலித் துறையில் கனடாவில் ஈழத் தமிழரின் புதிய கின்னஸ் சாதனை!

2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

21. 06. 2016: அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
பக்கம் 1, மொத்தம் 237 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.