புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 10, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »

24. 07. 2015: தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள்

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

23. 07. 2015: அவுஸ்திரேலியாவில் வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி! ஒருவர் படுகாயம்!

அவுஸ்ரேலியாவில் நடந்த வாகன விபத்து ஒன்றின்போது இரு இலங்கையர்கள் பலியானதாக அவுஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் அறியமுடிகின்றது.

17. 07. 2015: உறங்கிக் கொண்டிருக்கும் உலகின் மனச்சாட்சியை நம்முடைய ஒவ்வொரு கையெழுத்தும் தட்டி எழுப்ப வேண்டும்!- ஓவியர் புகழேந்தி

இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரழிவை தமிழினம் கண்டிருக்கிறது. மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை அரசு தமிழீழத்திலே ஆயிரக்கணக்கான தமிழர்களை சர்வதேச அளவிலே தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பாவித்து கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்து ஆறாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழர்களின் நெஞ்சில் அதன் வலியும் வேதனையும் நிறைந்திருக்கிறது.

10. 07. 2015: பிரபல அமெரிக்க ஹவார்ட் பல்கலையில் தமிழ்த்துறை ஆரம்பம்!

உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டொக்டர் விஜயராகவன் ஜானகிராமன் தெரிவித்தார்.

10. 07. 2015: மில்லியனை நெருங்கும் ஐ.நாவை நோக்கிய கையெழுத்து வேட்டை!

இலங்கைத்தீவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அவர்களது கருத்து, பலரது கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஐ.நாவை நோக்கிய கையெழுத்துப் போராட்டம் மில்லியனை நெருங்கி வருகின்றது.சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரி உலக தமிழர் பரப்பெங்கும் முனைப்பு பெற்றுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் இணையவழி எட்டு லட்சம் மின்னொப்பங்களை கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

08. 07. 2015: சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு, தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 5ம் திகதி பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

08. 07. 2015: இலங்கையின் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் பிரித்தானியாவில் மரணம்

இலங்கையில் பிறந்த கிரிக்கட் வீரர் ஒருவர் பிரித்தானியாவில் விளையாடிக்கொண்டிருந்த போது மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரித்தானிய தமிழ் லீக் பிரிவு மூன்றுக்கான போட்டிகள் சரேயில் இடம்பெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

08. 07. 2015: இத்தாலியில் சமையல் எரிவாயு வெடித்ததில் ஒரு இலங்கையர் பலி

இத்தாலியின் தாராந்தோ பிரதேசத்தில் வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதான இலங்கையரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று இலங்கையர்கள் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

06. 07. 2015: போரால் பிரிந்த குடும்பத்தை 36 ஆண்டுகளின் பின் சேர்த்து வைத்த வட்ஸ்அப்

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ்-ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும்.

24. 06. 2015: உலகின் முதலாவது தமிழ் பிரதமர்.

உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை உலகில் இடம்பெயர்ந்த தமிழன் பல பெரும் பதவிகளில் இன்று வகித்து வருகிறான்
பக்கம் 10, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.