புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 20, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

10. 04. 2014: ஆஸியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் தீக்குளிப்பு

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது.

09. 04. 2014: செந்தூரனை பார்வையிட அவரது மனைவிக்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதி

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ அகதி செந்தூரனை சந்திக்க அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

08. 04. 2014: கேள்விக்குறியாகியுள்ள தாயக உறவுகளின் பாதுகாப்பு

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் 424 பேர் இலங்கை வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள தான அறிவித்தல், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

07. 04. 2014: சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது

இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியல் மற்றும் சிறிலங்காவின் வர்த்தகமானி அறிவித்தலுக்கு எதிரான முன்னகர்வு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று கூடுகின்றது.

05. 04. 2014: இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா தலைவர்கள், இராணுவ தளபதிகளின் பட்டியல் ஐ.நாவிடம் சமர்ப்பிப்பு -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள்,  இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது.

04. 04. 2014: தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு! 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை (பெயர் விவரங்கள் இணைப்பு)

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

02. 04. 2014: 700 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்ற பின்பும் வெளியுறவுக் கொள்கை மாறாதா? – இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவிடம் கேள்வி

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது இந்தியா.

02. 04. 2014: புலம்பெயர் அமைப்புக்களை தடைசெய்தமை வெட்கத்துக்குரிய செயல்- உலகத் தமிழர் பேரவை

புலம்பெயர்ந்த 16 தமிழ் அமைப்புக்கள் மற்றும் உலக தமிழர் பேரவை உட்பட்ட நான்கு தமிழ் புலம்பெயர்ந்தோர் நடவடிக்கை மையங்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக இலங்கை அரசாங்கம் பெயரிட்டு அவற்றை தடை செய்தமை வெட்கத்துக்குரிய செயல் என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

01. 04. 2014: 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

27. 03. 2014: அமெரிக்கப் பிரேரணை 11 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி! இலங்கை அரசு சங்கடத்தில்

நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது. ஆனாலும் அந்தப் பிரேரணை படு தோல்வியடைந்துள்ளது.
பக்கம் 20, மொத்தம் 237 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.